சிலைக்கு - படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா அவர்களின் 114ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2022) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, கழக அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், இளைஞரணி தலைவர் சி.மகேந்திரன், 'விடுதலை' நகர் பி.சி.ஜெயராமன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, கொடுங்கையூர் கழக அமைப்பாளர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், பெரியார் நூலக வாசகர் வட்டம் - செல்லப்பன், தங்க.தனலட்சுமி, முத்து லட்சுமி, செ.பெ.தொண்டறம், நர்மதா மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக