September 07, 2022 • Viduthalai
88 ஆண்டுகால ‘விடுதலை' என்னும் நம் இனத்தின் போர்வாளின் ஆசிரியராக 60 ஆண்டுகாலம் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களிடத்தில், சுறுசுறுப்புத் தேனீக்களாகக் கடும் உழைப்பில் ஈடுபட்டுத் திரட்டப்பட்ட 27,605 ‘விடுதலை' சந்தாக்களை தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் அளித்தனர். இது முதல் தவணையென்றும், ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று எஞ்சிய சந்தாக்களை அளிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக