பெரியார் 1000
• Viduthalai
சென்னை, ஆக. 21- 18.08.2022 மதியம் 2.30 மணியளவில், அரும்பாக்கம் நேஷனல் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பெரியார் 1000 வினா-விடை போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்வை, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தொடங்கி வைத்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ. வெங்கடே சன், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. இரா. மாணிக்கம், திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட் டச் செயலாளர் செ.ர. பார்த்த சாரதி, மாவட்டத் துணைச் செய லாளர் அரும்பாக்கம் சா. தாமோ தரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வம், தாம் பரம் மாவட்ட துணை செயலாளர் குணசேகரன், க.கலைமணி மற்றும் தோழர் படப்பை சந்திரசேகர் அனைவருடைய ஒத்துழைப்புடன், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆர்வ மாக தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கும், பள்ளி சார்பாக தேர்வு நடத்த உதவிய ஆசிரியர்க ளுக்கும், பள்ளி தாளாளருக்கும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் சிறப்பு செய்யப்பட் டது. நிகழ்ச்சி அரும்பாக்கம்
சா. தாமோதரன் ஒருங்கிணைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக