தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம் 8.7.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களின் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையிலும் இல்லத்தில் நடைபெற்றது.செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்டம் முழுக்க தந்தை பெரியார் 143வது பிறந்த நாளை இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
தென் சென்னை மாவட்டம் முழுக்கவுள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், பெரியார் படம் வைத்து விளம்பரப்படுத்துதல், கழக கொடி ஏற்றுதல், அறிவிப்பு பலகை வைத்தல், சுவரெழுத்து வரைதல், சுவரொட்டி ஒட்டுதல் என பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் சா.தாமோதரன், ஆயிரம்விளக்கு மு.சேகர், இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு.சண்முகப்பிரியன், கோட்டூர் க.சிவசீலன் மற்றும் புதிய தோழர் யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை கூறினர்.
இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக