வியாழன், 7 அக்டோபர், 2021

சி.பா.ஆதித்தனாரின் 117ஆவது பிறந்த நாள்: சிலைக்கு மலர்மாலை அணிவித்து தமிழர் தலைவர் மரியாதை

 

தினத்தந்தி’ நாளிதழின் நிறுவனரும்மேனாள் அமைச்சருமான நினைவில் வாழும் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (27.9.2021) காலை சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார்தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்செயலாளர் செ..பார்த்தசாரதிதுணைச் செயலாளர் கோ.வீ.ராகவன்துணைத் தலைவர் அரும்பாக்கம் சா.தாமோதரன்பா.சிவகுமார்மகேந்திரன்கலைமணிஆனந்த் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்: நம்முடைய அறிவாயுதங்களை - போராட்ட ஆயுதங்களைக் கூர்மைப்படுத்துகின்ற நாள்

ஆதித்தனார் ஊட்டிய தமிழ் உணர்வு வழிநடத்தட்டும்!

செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர்

சென்னைசெப்.27  சி.பாஆதித்தனார் பிறந்த நாள் என்பது நம்முடைய அறிவாயு தங்களை - போராட்ட ஆயுதங்களைக் கூர்மைப்படுத்துகின்ற நாள்ஆதித்தனார் ஊட்டிய தமிழ் உணர்வு வழிநடத்தட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

சி.பாஆதித்தனாரின் 117 ஆவது பிறந்த நாளான இன்று (27.9.2021) காலை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்றவர்!

தமிழர்களுடைய உரிமைகளுக்காக கடைசிவரையில் போராடியதந்தை பெரியார் அவர்களோடு தோளோடு தோள் நின்றுபல நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்காக மாநாடுகளைக் கூட்டிமிகப்பெரிய அளவில் ஒன்றாகப் பயணித்த பெருமதிப்பிற்குரிய நம்முடைய தமிழர்களுடைய ஒப்பற்ற பாதுகாவலராக தன்னுடைய வாழ்நாளில் திகழ்ந்த சி.பா.ஆதித்தனார் அவர்களுடைய பிறந்த நாளான இன்றைக்கு அவரை நினைவூட்டுவது மட்டுமல்லஅவர் எந்தப் பணியை செய்தாரோஅந்தப் பணி இன்னமும் முற்றுப்பெறாத அளவிற்கு இருக்கிறது.

'தமிழன் கால்வாய்என்று பெயர் சூட்டும் அளவிற்கு உணர்வு படைத்தவர்அதுமட்டுமல்லசெம்மொழியாக கலைஞர் அவர்கள் தமிழ்மொழியைநம் மொழியை உயர்த்திய நிலையில்இன்னமும்தமிழுக்கும்தமிழர்களுடைய உரிமைகளுக்கும் போராடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. 'உயிர் தமிழுக்குஉடல் மண்ணுக்குஎன்று சொன்னவர்.

நம்முடைய அறிவாயுதங்களைபோராட்ட ஆயுதங்களைக் கூர்மைப்படுத்துகின்ற ஒரு நாள்

எனவேதான்ஆதித்தனார் அவர்களு டைய பிறந்த நாள் விழா என்பது - மேலும் நம்முடைய பயணத்தைநம்முடைய அறிவாயுதங்களைபோராட்ட ஆயுதங்களைக் கூர்மைப்படுத்துகின்ற ஒரு நாள்ஆதித்தனார் அவர்களுடைய நினைவுநம்மை மேலும் உற்சாகப்படுத்தும்ஊக்கப்படுத்தும்.

அவர் எந்த சமுதாயத்தை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்திதமிழர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற எப்படி நினைத்தார்களோஅந்த உரிமைகளை நாம் முன்னெடுத்துச் செல்வதுதான் அவருக்குச் செய்கின்ற பெருமை!

ஆதித்தனாருடைய நினைவுகள் நம்மை வழிநடத்தட்டும்!

ஆதித்தனார் அவர்களுடைய புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும்காரணம்அவர்தான் ஒரு பெரிய திருப்பத்தை பத்தி ரிகை உலகத்தில் ஏற்படுத்திதமிழர்களுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுத்தவர்தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையில் போராடிய ஒரு மகத்தான போராளியாக வாழ்ந்த பெருமகன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறந்த அமைச்சர்களில் ஒருவராக முத் திரை பதித்தவர்இப்படி எத்தனையோ அத் தியாயங்கள் ஆதித்தனார் வாழ்க்கையில் உண்டுஅவைகளும் சிறப்பானவை.

எனவேஆதித்தனாருடைய நினைவுகள் நாட்டை வழிநடத்தட்டும்!

நன்றிவணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக