வியாழன், 7 அக்டோபர், 2021

திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக- உரிமையுள்ள ஒரு சமுதாயமாக உருவாக்க சூளுரைப்போம்! (அண்ணா பிறந்த நாள்)

 

அறிஞர் அண்ணா படம் அல்ல - பாடம்!

செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர்

சென்னைசெப்.15 அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பிய ஒரு புதிய திராவிட சமுதாயத்தைமானமும் அறிவும் உள்ள சமுதாயத்தைஅதேநேரத்தில் உரிமை யுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க சூளுரைக்கும் நாளாக இந்த நாளைப் பார்க்கிறோம்இந்நாள் வெறும் மகிழ்ச்சிக்குரிய நாளல்ல - காரணம்அண்ணா படம் அல்ல - பாடம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அறிஞர் அண்ணாவின் 113 ஆம் நாளான இன்று (15.9.2021) காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின்கீழ் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்அவ்விவரம் வருமாறு:

ஓர் ஆட்சியினுடைய நீட்சி - தொடர்ச்சியாக இன்றைய ஆட்சி!

பேரறிஞர்அண்ணாவின்113ஆம்ஆண்டுபிறந்த நாள் விழாவான இன்று எல்லையற்ற மகிழ்ச்சி யோடு கொண்டாடக் கூடிய வகையில்உண்மை யான ஒரு திராவிட ஆட்சி - அண்ணா எந்த உணர்வோடு அரசி யலுக்குச் சென்று ஆட்சி அமைத்தார்களோஅந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று ஆக்கினார்களோ - அதே உணர்வு கொண்ட ஓர்ஆட்சியினுடையநீட்சியாக-தொடர்ச்சியாகஇன்று ஆட்சி அமைந்த நிலையில்அண்ணா அவர்களு டைய பிறந்த நாளைக் கொண்டாடுவது - மற்ற பிறந்த நாள் விழாக்களைவிட தனிச் சிறப்பு மிகுந்த தாகும்.

 இழந்த உரிமைகள் மீட்டுருவாக்கம்

தந்தை பெரியார் பண்படுத்திய நிலத்தை - அறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய அடிக்கட்டு மானத்திலே - மிகச் சிறப்பான ஒரு திராவிடக் கொள்கை மாளிகையை கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள் என்றால்அதனைக் கட்டிக்காத்துமேலும் வலிவு டனும்பொலிவுடனும் நடத்தக்கூடிய ஆற்றல் - சமூகநீதிக்கான சரித்திர நாயகராக இன்றைக்கு உயர்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் - கலைஞர் அவர்களுடைய பாணியிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மு..ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில்ஒப்பற்ற திராவிடக் கொள்கைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல - இழந்த உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்நீட் போன்ற கொடுமைகளையும் எதிர்த்துக் களம் காணவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

என்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - எப்பொழுதும் அண்ணா அமைத்த களம் தேவைப்படுகிறது

அண்ணா அவர்கள் சொன்னார்கள்என் பணி ஓயவில்லை என்றுஅதுபோன்ற அளவிற்குஇன்றைக்கு மாநிலங்களுடைய உரிமைகள் நாளும் பறிக்கப்படக் கூடிய சூழ்நிலையில்ஹிந்தித் திணிக்கப்படக் கூடிய ஒரு நெருக்கடியான காலகட்டத்தில்என்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - எப்பொழுதும் அண்ணா அமைத்த களம் தேவைப்படுகிறது - எப்பொழுதும் கலைஞர் நின்று போராடிய அந்த நிலம் நமக்குப் பாடங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

அண்ணா படம் அல்ல - பாடம்!

எனவேதான்அண்ணா பிறந்த நாளில்நாம் சூளுரை எடுக்கவேண்டும் - அவர் விரும்பிய ஒரு புதிய திராவிட சமுதாயத்தைமானமும் அறிவும் உள்ள சமுதாயத்தைஅதேநேரத்தில் உரிமையுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க சூளுரைக்கும் நாளாக இந்த நாளைப் பார்க்கிறோம்.

வெறும் மகிழ்ச்சிக்குரிய நாளல்ல - காரணம்அண்ணா படம் அல்ல - பாடம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

-----------------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக