சனி, 1 செப்டம்பர், 2018

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்சென்னை, செப். 1 26.8.2018 அன்று மாலை 5 மணி அளவில் சென்னை பெரியார் திடலில், தென் சென்னை மாவட்டத்தின் கலந்துரையாடல் கூட் டம், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தலைமை யிலும் அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகி யோர் முன்னிலையிலும் நடைபெற் றது. தந்தை பெரியாரின் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் விடுதலை சந்தா சேர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வரும் செப்டம்பர் 17ஆம் நாளுக்குள் மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட நூறு விடு தலை சந்தாவை வசூலித்து கொடுப் பதென முடிவு செய்யப்பட்டது.


மாவட்ட துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் மற் றும் அ.பாபு, கு.செல்வேந்திரன், மு.சண்முகப்ரியன், இ குமார் ந.மணித்துரை  ஆகியோர் கருத்துக்களைக் கூறினர். கு.பா. அறிவழகன் நன்றி கூறினார்.

தென் சென்னை மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: வி.விஸ்வாஷ், செய லாளர்: கு.பா.அறிவழகன், அமைப் பாளர்: வி.தமிழ் முரசு, துணைத் தலைவர்: வி.தங்கமணி, துணைச் செயலாளர்: வெ.தா. தமிழ்ச்செல்வி
- விடுதலை நாளேடு, 01.09.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக