வியாழன், 30 ஆகஸ்ட், 2018

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - சென்னை

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, ஆக. 30- சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 26.8.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணியளவில், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகிக்க, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் ஈரோடு மண்டல செயலாளர் ப.வெற்றிவேல், மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இரா.அறிவுமணி, கிருட்டிணகிரி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கா.வெற்றி, சென்னை மண்டல மாணவர் கழகச் செயலா ளர் பா.மணியம்மை, திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நா.பார்த்திபன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால். கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கண்மணி மற்றும் மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்திற்கு மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் த.மு.யாழ்திலீபன் வரவேற்புரை ஆற்றினார். கோவை மண்டல மாணவர் கழகச் செயலாளர் இரா.சி. பிரபாகரன் கடவுள் மறுப்புத் தத்துவங்களை கூறினார். இக்கூட்டத்தின் தொடக்க உரையாக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் கொள்கையை விளக்கி கூறினார். மேலும் மநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.அஜிதன், மாநில மாணவர் கழகச் கூட்டுச் செயலாளர் சே.மெ. மதிவதனி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் கோவை ஆ.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.தீர்மானங்கள்


1. மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாதியாக வாழ்ந்து மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மறைவிற்கு இக்கூட்டம் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

2. அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் பெரு விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், டாக்டர் கலைஞர் அவர்களது முழு உருவச் சிலை திறக்கப்படும் என அறிவித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

3. தாழ்ந்து கிடந்த தமிழனை தட்டியெழுப்பி தன் மான, இனமான, மொழிவுணர்வை ஊட்டிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழாவினை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங் களில் தந்தை பெரியார் படம் அமைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொள்கை பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வதென முடிவு செய்யப்பட்டது.

4. அறிவு ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை அனைத்து மாவட்டங்களிலும் கவிய ரங்கம், கருத்தரங்கம், நூல் அறிமுக விழா என நடத்துவ தற்கு முடிவு செய்யப்பட்டது.

இத்தீர்மானங்களை விளக்கி மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற் றினார். அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாணவர் கழகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக உரையாற்றினார். நிறைவு உரையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திராவிட மாணவர் கழகத்தின் சிறப்பினையும், அதை வலுப்படுத் துவதற்கான தேவைகளையும், வழிமுறைகளையும் விளக்கிப் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்ப்பாண்டியன் இணைப்புரையாற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:

செய்யாறு மாவட்ட மாணவர் கழக தலைவர் ஆ. தினேஷ், மாவட்ட மாணவர் கழக செயலாளர் எஸ். தினேஷ்குமார், மாவட்ட அமைப்பாளர் கோ.பிரசாந்த்.

தென்சென்னை மாவட்ட மாணவர் கழக தலைவர் வி.விஸ்வாஸ், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் வி.தங்கமணி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் கு.பா.அறிவழகன், மாவட்ட மாணவர் கழக துணை செயலளர் வெ.தா.தமிழ்ச்செல்வி, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் விடுதலை தமிழ்முரசு.

மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ர.அன்புமதி.

நிறைவாக மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ந.பார்த்திபன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 30.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக