சனி, 15 செப்டம்பர், 2018

அறிஞர் அண்ணா அவர்களின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள்

கழகத் துணைத் தலைவர் தலைமையில் மாலை அணிவிப்பு




சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா அவர்களின் 110ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2018) சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு காலை 11 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர், தோழியர்கள் புடை சூழச் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்குரைஞர் அணித் தலை வர் த.வீரசேகரன், வெளியுறவுச் செயலாளர் வீ.கும ரேசன், மகளிரணி க.பார்வதி, இன்பக்கனி, பசும் பொன் செந்தில்குமாரி, வழக்குரைஞர் வீரமர்த் தினி, தங்க.தனலட்சுமி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா.முத்தையன், சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீனுவாசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சேது ராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், திண்டிவனம் சிறீராமுலு, மகேஷ், க.கலைமணி, செஞ்சி ந.கதிரவன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், வட சென்னை இளைஞரணித் தலைவர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங்கையூர் தலைவர் கோ.தங்க மணி, செம்பியம் தலைவர் பா.கோபாலகிருஷ் ணன், வியாசர்பாடி செயலாளர் சு.மும்மூர்த்தி, தரமணி மஞ்சுநாதன், ஆயிரம் விளக்கு சேகர், ராயப்பேட்டை ஆனந்தன் மற்றும் திரளான தோழர், தோழியர்கள் பங்கேற்று மரியாதைச் செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக