வெள்ளி, 14 செப்டம்பர், 2018

தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்" கருத்தரங்கம்சென்னை, செப்.13 தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகலாம் கருத்தரங்கம், சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில், டிஸ்கவரி புக் பேலசில், 26.8.2018 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.


வட சென்னை மாவட்டத்தலைவர் கோவி. கோபால் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி னார். தென் சென்னை மாவட்ட துணத்தலைவர் இளம்பெரியார் வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமை ஏற்று ஆற்றிய உரையில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை ஏன்? என்பது பற்றி பேசினார்.  இந்த போராட்டத்திற்கான தேவை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று பேசினார்.

வட சென்னை பகுத்தறிவாளர் கழக  தோழர்கள் மு.பழனி, பா.இராமு, இரா.சண்முக நாதன் தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஜே.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பகுத்தறிவாளர் கழக தாம்பரம் மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்  உரிமை" பற்றி உரையாற் றினார். மேலும், தந்தை பெரியார் முதல் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் வரை அனைத்து சாதியினருக்கும்அர்ச்சகர் உரிமை பற்றிய போராட்டக்களத்தின் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழக  மாநில துணைத் தலை வர் அ.தா.சண்முகசுந்தரம் தனது உரையில்,

பகுத்தறிவாளர் கழகம் ஏன்வாழ்வியலுக்கு தேவைப்படுகிறது என்பதை விளக்கியதுடன், மனிதன்  ஒரு சமுதாய விலங்கு என்பதன்  உளவியல் ரீதியான தொடர்பை பற்றி விளக்கி னார்.  பகுத்தறிவாளர் கழகம் என்பது மனித நேய  கழகம்  என்று  கூறினார். கருப்பின  மக் களுக்கு வாழ்வுரிமையும்,   சம உரிமையும் பெறவும் அடிமைத்தனத்தை அகற்றவும் அரும் பாடு பட்ட ஆப்ரகாம்லிங்கன் பற்றி மேற்கோள் காட்டிபேசினார். இந்தியாவில் ஜாதி ரீதியான அடிமைத்தனம் ஒழிந்தால் தான் மனித சமூக வாழ்வியல் மேம்படும் என்றும், அதற்காகவே பகுத்தறிவாளர் கழகம் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றி விளக்க, இக் கூட்டத்தை நடத்துகிறது என்று பேசினார்.

பகுத்தறிவாளர் கழக தென் சென்னை மாவட்ட உறுப்பினர் மீ.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். அவர் தனது உரையில்,

தமிழன் பிரசன்னா அவர்களது இளமைக் கால, வசதி இல்லாத சூழலில், பள்ளி வாழ்க்கை மற்றும் கல்லூரி வாழ்க்கை பற்றிகூறினார்.  கல்லூரி முதல்வரிடம், தன் பொருளாதார நிலையினை எடுத்துக்கூறி, தன் விருப்பப்பாடமாக, ஆங்கில முதன்மை பாடம்படிக்க விரும்புவதை தெரிவித்து, எந்த கட்டணமும் இன்றி கல்லூரி படிப்பு முடித்ததையும்  எடுத்துரைத்தார். சிறப்பு பேச்சாளருக்கு, மாநில துணைத்தலைவர் அ.தா.சண்முகசுந்தரம், ப.க. தென் சென்னை மாவட்ட உறுப்பினர் கி.பெரியகண்ணன்  இரு வரும், பயனாடை மற்றும் புத்தகம் வழங்கி சிறப்பு செய்தனர்.

சிறப்பு பேச்சாளர் தி.மு.க ஊடகத்தொடர்பு மாநில இணைச்செயலாளர்,வழக்குரைஞர், தமிழன் பிரசன்னா  "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்" என்ற தலைப்பில் பேசியதாவது:

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்பதற்கான சட்டம் இயற்றப்பட்டும், அது இன்னும் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது என்றும், அர்ச்சகர் ஆவதற்குரிய தகுதியான, ஆகமங்களை கற்றுத் தேர்ந்த 206 பேரில், ஒருவர்மட்டும், மதுரையில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் ஒரு கோயிலில், அர்ச்சகராக நியமனம் செய்யப் பட்டு இருக்கிறார்என்றும், இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்றாலும் மற்றவர்களும் இதுபோல் பணியில் அமர்த்தப்படும் வரை போராடுவோம் என்று பேசினார்.  அண்ணல் அம்பேத்கர், ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் போன்றோரின் கருத்துகளை மேற் கோள் காட்டி பேசினார். தன் அமெரிக்க பயணத்தில், இண்டியானா மாகாணத்தில், ஆப்ரகாம் லிங்கன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் சிலைகள் அமைந்த இடம்பற்றி விளக்கி னார். அண்ணல் காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கர் இவர்கள் கருததுககளை மேற்கோள் காட்டிப் பேசினார். அண்ணல் அம்பேத்கரின் ஆங்கிலப் புலமையை விளக்கிக் கூறினார்.  சட்டங்கள் சமூக வாழ்வியலை எப்படி மாற்று கின்றன என்பது பற்றி விளக்கினார். தன்னை பெரியாரியல் மாணவன் என்று அடை யாளப்படுத்தி, பெரியார் என்ற மகத்தான தலைவர், தன் வாழ்வில், தன் வளர்ச்சியில் ஏற்படுத்திய வெற்றிப்படிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அவருடைய தமிழும், ஆங் கில நடையும், மிக எளிமையாகவும், சிறப்பாக வும் இருந்தது.

தென் சென்னை மாவட்ட ப.க. உறுப்பினர் சு.சிவகுமார் நன்றி கூறினார்.

-  விடுதலை நாளேடு,13.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக