பெரியார், அண்ணா, கலைஞர் படங்களை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பாராட்டப் பெற்ற ஓவியா, எத்திராசன், சேகுவேரா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்
சென்னை,செப்.14 தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாக்கள், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 38ஆம் ஆண்டு கலை விழா செப்.13,14,15 ஆகிய மூன்று நாள்கள் நடை பெறுகின்றன.
முதல் நாள் விழா நேற்று (13.9.2018) மாலை சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் கி.சத்தியநாராயணன் வரவேற் றார். துணை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரையாற் றினார்.
பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள் திறப்பு
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இணைந்த படத்தை திமுக அமைப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்து உரையாற் றினார்.
கலைஞர் படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற் றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பயானடை அணிவித்து சிறப்பு செய்தார்.
மலர் வெளியீடு, பாராட்டு
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 55ஆண்டுகளாக விடுதலை மலர் சிறப்பிதழ் வெளியிடப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா நடை பெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களி டமிருந்து ஏராளமானவர்கள் மலரைப் பெற்றுக் கொண் டார்கள்.
மலர் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, பிறந்த நாள் தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் தயாரிப்புப் பணிக்காக கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களுக்கு பய னாடை அணிவித்து பாராட் டினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் அவர்கள் தொடக்கம் முதல் ஆயுள் தலைவராக இருக் கிறார் என்று குறிப்பிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட் டினார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட முப்பெரும் விழாவின் முதல் நாளில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 'திராவிட இயக்க வீராங்கனைகள்' தொடர் சொற் பொழிவாற்றிய எழுத்தாளர் ஓவியா, இளை ஞர்களிடையே அறிவியல் சிந்தனையை ஊக்கு வித்து வருபவரான செந்தமிழ் செல்வன் சேகுவேரா, 25முறை குருதிக்கொடை வழங்கிய வரான சைதை எத்திராசன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு பெறும் மூவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
விழா நிறைவாக பெரியார் நூலக வாசகர் வட்ட பொரு ளாளர் சேரன் நன்றி கூறினார். பெரியார் நூலக வாசகர் வட்ட துணை செயலாளர் தென்மாறன் மற்றும் உறுப்பினர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பெருந் திரளாக வருகை தந்து சிறப்பித்தனர்.
- விடுதலை நாளேடு, 14.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக