புதன், 12 செப்டம்பர், 2018

திராவிடன் நிதி லிமிடெட்டின் தலைவர் டி.கே.நடராசன் துணைவியார் குஞ்சிதம் அம்மையார் மறைவு

சென்னை அரசு மருத்துவமனையில் உடற்கொடை அளிக்கப்பட்டது




திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்  மறைந்த குஞ்சிதம் அம்மையார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, செப். 7- பெரியார் புத்தக நிலைய மேலாளர், திராவிடன் நிதி தலைவர் த.க.நடராசன் அவர்களின் வாழ்விணையர் குஞ்சிதம் நடராசன் (வயது 75) உடல்நலமின்றி மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (6.9.2018) காலை மறைவுற்றார். அவரது உடல் சென்னை பெரியார் திடலில் பெரியார் நினைவிடம் வாயிலில் அருகில் வைக்கப்பட்டது. குஞ்சிதம் நடராசன் உடலுக்கு கழகக் கொடியை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் போர்த்தினார்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி இரங்கலுரையாற்றினார்.



கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மறைந்த குஞ்சிதம் அம்மையார் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்.


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,   வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் இராஜசேகரன், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்,  நீதிபதி பரஞ்சோதி (ஓய்வு) க.பார்வதி, கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு,  திராவிட நலநிதி மேலாளர் அருள்செல்வன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன் உள்ளிட்டவர்கள் இரங்கலுரையாற்றினார்கள்.

மோகனா வீரமணி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன், சுதாஅன்புராஜ்,  அச்சக மேலாளர் க.சரவணன், செய்திப்பிரிவு சிங்காரம், வே.சிறீதர், கணக்குப்பிரிவு முத்துக்கிருஷ்ணன், அச்சகப்பிரிவு பிரபாகரன், ஜெய ராஜ், பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி கா.அமுதரசன், நூலகர் கோவிந்தன், சுயமரியாதை திருமண நிலையம் பசும்பொன்செந்தில்குமாரி, நடிகவேள் எம்.ஆர்.ராதாமன்றம், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை உள்ளிட்ட பெரியார் திடல் பணியாளர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் பலரும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆடிட்டர் இராமச்சந்திரன், அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன்,  சட்டத்துறை தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் ஜெ.துரை, வழக்குரைஞர் ரத்தினகுமாரி, வழக்குரைஞ ரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கு.தங்க மணி, தங்க.தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி,  நாகவள்ளி, பெரியார் களம் இறைவி, சந்திரா முனுசாமி, மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

குஞ்சிதம் நடராசன் அவர்களுக்கு அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர், அவரது உடல் ஆம்பு லன்ஸ் மூலம் சென்னை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரியார் நினைவிடப்பகுதியி லிருந்து ஆம்புலன்சைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன்  அனைவரும் இணைந்து நடந்துசென்றார்கள். குஞ்சிதம் நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம் முழக்கத்துடன் இறுதி ஊர்வலம் சென்றது. பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை அன்னை மணிம் மையார் சிலை அமைந்துள்ள பகுதிவரை ஊர்வலம் சென்றது. அதன்பின்னர் சென்னை பொது மருத்துவ மனையில் உடற்கூறுஇயல் துறை இயக்குநர் சுதாசேஷய் யன் உடற்கொடை அளித்த குஞ்சிதம் நடராசன் குடும் பத்தினருக்கு வணக்கத்துடன் நன்றி யைத் தெரிவித்துக் கொண்டார்.

-  விடுதலை நாளேடு, 7.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக