செவ்வாய், 24 ஜூலை, 2018

சோமங்கலத்தில் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்



 

சோமங்கலம், ஜூலை 22 கடந்த 15.7.2018 அன்று மாலை தாம் பரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்  கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சோமங்கலம் காவல் நிலையம் அருகில் மாலை 6மணியளவில் தாம்பரம் மாவட்ட கழக தலை வர் ப.முத்தையன் அவர்கள் தலைமையில் மாவட்ட செய லாளர் கோ.நாத்திகன் முன்னி லையில் நடைபெற்றது.

சென்னை மண்டல மாண வர் கழக செயலாளர் பா.மணி யம்மை தொடக்கவுரை ஆற்றி னார். கூட்டத்தை ஒருங்கி ணைத்து சிறப்புடன் அமைத்தார் இனமாறன் கூட்டத்தில் சென்னை மண்டல கழக தலை வர் தி.இரா.இரத்தினசாமி உரை யாற்றியபின் தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரி யார்செல்வன் சிறப்புரையாற்றி னார். சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கழக தோழர்கள் அரும்பாக்கம் தாமோதரன்,தமிழ் செல்வன், ஊரப்பாக்கம் இராமண்ணா, சீனிவாசன், அரங்க.பொய்யாமொழி.பொ.பெரியார் செல்வன், அனகை ஆறுமுகம், சண் சரவணன், மாணிக்கம், கரைமா நகர் தே.சுரேஷ், குன்றத்தூர் திரு மலை, பரசுராமன், சரவணன், செஞ்சி முத்து, பாலமுரளி குடும்பத்தினர் மேடவாக்கம் சோமசுந்தரம், மு.மணிமாறன், பொறியாளர் இ.ப.சீர்த்தி, மா.குணசேகரன், பண்பொழி, அர்சுனன், பல்லாவரம் கெ. விஜயகுமார், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடி வில் பா.நிர்மலா நன்றி கூறி னார்.

 
- விடுதலை நாளேடு, 22.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக