சென்னை, ஜூலை 27, திராவிட மாணவர் கழக சென் னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் 22.7.2018 அன்று காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில், பெரியார் வலைக்காட்சி யகத்தில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத் திற்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் தலைமை வகித்து கும்பகோணம் மாநாட் டின் சிறப்பை பற்றியும், அம் மாநாட்டிற்கு தமது பங்களிப்பை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடவுள் மறுப்பு கூறிநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் அவர் பேசுகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வேண்டுகோளின்படி பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக் கழகங்களின் படி திரா விட மாணவர் அமைப்பை உரு வாக்குவது, புதிய மாணவர்களை எப்படி தொடர்பு கொள்வது, திராவிட மாணவர் கழகத்திற்கும், மற்ற மாணவர் அமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி யும், மாணவர் அமைப்பு துவங்கு வதற்கான நோக்கத்தை பற்றியும், அடுத்து பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய அடிப்படை பணி களைப் பற்றியும் விளக்கி உரை யாற்றினார். ஒவ்வொரு மாணவர் களையும் கருத்துக்கூறச் சொல்லி விளக்கம் அளித்தார். புதிதாக வந்த மாணவத் தோழர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தினார். அடுத்து சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால் அவர் களும் மாணவர் அமைப்பு செய்யும் பணிகளில் தேவையான உதவிகளை செய்வேன் எனவும், ஒரு நாள் நடைபெறும் பெரி யாரியல் பயிற்சி பட்டறைக்கு மதிய உணவிற்கான செலவினை தாம் ஏற்பதாக ஒப்புக் கொண்டும் தமது உரையை நிகழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை மாநில மாநாட்டில் மாணவர்கள் ஏற்ற உறுதி மொழியினை விளக்கி உரையாற்றினார்.
கலந்துரையாடலில் தீர்மா னங்கள்: 1) திராவிட மாணவர் கழக பவள மாநாட்டின் தீர்மானங் களை செயல்படுத்துதல்.
2) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்குதல்.
3) ஆகஸ்ட் மாதம் 4,5, ஆகிய இரண்டு நாட்கள் சென்னை மண்டல மாணவர் கழக மற்றும் இளைஞரணி பொறுப்பாளர் களுக்கு பயிற்சி வகுப்பை நடத்துதல் (தலைமை பண்பு களை வளர்க்கும் திறன்).
4) ஆகஸ்ட் 12ஆம் தேதி பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துவது எனவும், இப்பயிற்சி பட்டறையில் சென்னை மண்ட லத்திற்கு உட்பட்ட மாணவத் தோழர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்றத் தோழர்கள், புதிய மாணவர்களை ஒருங்கிணைத்து நடத்துவது எனவும்,
5) பள்ளி, கல்லூரி மாண வர்களிடையே துண்டறிக்கை பரப்புரை செய்வது, சுவ ரொட்டி ஒட்டுவது எனவும்,
6) மாதம் ஒரு முறை மாணவர் கழக கலந்துரையாடல் நடத்துவது எனவும், இதில் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, வாசிப்பு பயிற்சி போன் றவை அளிக்கப்படும் எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கலந்து கொண்டு சிறப்பித்தோர்
வ.கலைச்செல்வன், சிற்றரசு, வெண்ணிலா, தா.பர்தீன், செ.பெ. தொண்டறம், இ.ப.இனநலம், இ.ப.சீர்த்தி, உ.விஜய், வேலவன், பா.பார்த்திபன், பா.நதியா, மு.மணிமாறன், செ.கவுதமன், கார்த்திகேயன், ரெ.யுவராஜ், தமிழ்ச்செல்வன், விக்கி, கு.ப.கவி மலர், செ.ரா.பார்த்தசாரதி, க.சுமதி, த.மரகதமணி, வை.கலையரசன், முரளி கிருஷ்ணன், அருள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக வடசென்னை மாவட்ட மாணவர் கழக தோழர் சு.க.வெண்ணிலா நன்றி கூறினார்.
மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த் திபன் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.
- விடுதலை நாளேடு, 27.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக