திங்கள், 16 ஜூலை, 2018

பச்சைத் தமிழர் காமராஜர் பிறந்த நாள்: சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு

சென்னை, ஜூலை 15, பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கல்வி வள்ளல் & பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2018) சென்னை பெரியார் மேம்பாலம் (சிம்சன்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் & தோழியர்கள் புடை சூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில வழக்கு ரைஞரணித் தலைவர் த.வீர சேகரன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலை வர் அழகிரிசாமி, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், மகளிரணி க.பார்வதி, வழக்குரைஞரணி அமைப்பாளர் வீரமர்த்தினி, சென்னை மண்டல கழகச் செயலாளர் தே.செ.கோபால், தலைமை கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை, சி.வெற்றிச் செல்வி, தங்க. தனலட்சுமி, வித்தியா ருக் மணி, தமிழ்நிலா, அனிச்சம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்த சாரதி, வட சென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட் டத் தலைவர் முத்தையன், லட் சுமிபதி, குண சேகரன், கீதா, கொடுங்கையூர் கோ.தங்கமணி, சைதை தென்றல், சோ.சுரேஷ், காரல்மார்க்ஸ், மகேஷ், ஆனந் தன், சுதன், விமல், சக்தி வேல், பெரம்பூர் இந்திரஜித், சேதுராமன், திண்டிவனம் சிறீ ராமுலு ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத் தினர்.

காமராசர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்த வுடன் அவருக்கு தலித்மக்கள் முன்னணி அமைப்பின் மாநில தலைவர் நெல்லை மணி மற்றும் அதன் நிர்வாகிகள் பய னாடை அணிவித்தனர்.

 - விடுதலை நாளேடு, 15.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக