சனி, 19 மே, 2018

பொன்னேரி இளைஞரணி மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

ஜாதியற்ற மூடநம்பிக்கையற்ற சமத்துவ சமுதாயம் படைக்க இளைஞர்களே சிறைக்கோட்டம் ஏகத் தயாராவீர்!




பொன்னேரி, மே 16 ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற, சமத்துவ சமுதாயம் படைப்போம் - அதற்காக சிறை செல்லவும் தயாராவீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

12.5.2018 அன்று மாலை சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பொன்னேரியில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.. அவரது உரை வருமாறு:

மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கப் பிரச்சார பேரணி


பொன்னேரி வட்டாரத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, நல்லதோர் மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கப் பிரச்சார பேரணியோடு மிகச் சிறப்பாக மாலையில், தாய்மார்கள் உள்பட கலந்து கொள்ளக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பையும், இந்தத் திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமையேற்று ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கக்கூடிய சென்னை மண்டல இளை ஞரணி செயலாளரும், சொந்தக் காலில் இளைஞர்கள் நிற்கவேண்டும் வேறு எந்தப் பந்தக் காலையும் கையை நீட்டக் கூடாது என்பதற்கு அடையாளமாக, சொந்தத் தொழிலதிபராக, உழைப்பின் உருவமாக இருக்கக் கூடிய அருமைத் தோழர் மானமிகு சிவசாமி அவர்களே,

இந்நிகழ்வில் கொடியேற்றி வைத்த அருமைத் தோழர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்வி அவர்களே, இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் நாகராஜ் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் இரணியன் அவர்களே, தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகுமார் அவர்களே, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் அவர்களே, ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் கார்வேந்தன் அவர்களே, தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேந்திரன் அவர்களே, வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் அவர்களே,

கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய மாநில மாண வரணி செயலாளர் தோழர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

தொடக்கவுரையாற்றிய மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் இளந்திரையன் அவர்களே,

இங்கே சிறப்புரைகளை நிகழ்த்திய கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பொதுச்செயலாளர்கள் மானமிகு அன்புராஜ் அவர்களே, ஜெயக்குமார் அவர்களே, பிரச்சார செயலாளர் மானமிகு வழக்குரைஞர் தோழர் அருள்மொழி அவர்களே,

சென்னை மண்டலத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா இரத்தினசாமி அவர்களே, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் தோழர் ஆனந்தன் அவர்களே, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் குமாரத்தேவன் அவர்களே, ஆவடி மாவட்டத் தலைவர் தோழர் தென்னரசு அவர்களே, தென்சென்னை மாவட்டத் தலைவர் தோழர் வில்வநாதன் அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவரும், இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு கடுமையான உழைப்பை மேற்கொண்டவருமான அன்பிற்குரிய தோழர் முத்தையன் அவர்களே, கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் தோழர் ரமேஷ் அவர்களே, தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் பார்த்தசாரதி அவர்களே, வடசென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஒளிவண்ணன் அவர்களே, ஆவடி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் அவர்களே, மற்றும் மாநாட்டுப் பேரணியைத் தொடங்கி வைத்தும், இந்த மாநாடு வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு அடித்தளமாக, மூலகாரணமாக, இயக்குநராக இருந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மண்டல செயலாளர் செயல்வீரர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே, மற்றும் பேரணிக்குத் தலைமை தாங்கிய மாநில இளைஞரணி துணை செயலாளர் கண்ணன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் கார்த்திகேயன் அவர்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக, மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அரசியல் கட்சிகளைச் சார்ந்த அரசியல் கட்சி நண்பர்களே, தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பொன்னேரி வாழ் பெருமக்களே, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்ச் சமுதாய சான்றோர்களே, நண்பர்களே, தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதியழகன் அவர்களைப் பெற்றெடுத்த  ஊர் கணியூர்


நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் கணியூரில், கோவை மேற்கு மண்டலம் தாராபுரம் மாவட்டம், உடுமலைப் பேட்டைக்கு அருகில் இருக்கக்கூடிய, நம்முடைய இயக்க செல்வங்களில் ஒருவரான, திராவிட இயக்கத்தினுடைய மாண்புமிகு தலைவராகத் திகழ்ந்த மதியழகன் அவர்களைப் பெற்றெடுத்த ஊர் கணியூர். அந்தக் கணியூரில் நடந்த மாநாட்டில், நேரத்தில் நெருக்கடியின் என்று சொன்னபோது, இது எனக்குப் போதாத காலம் என்று நான் என் உரையை ஆரம்பித்தேன். ஏதோ வைதீகர்கள் சொல்வதைப்போல அல்ல - காலம் போதவில்லை என்பதைத்தான் போதாத காலம் என்றும், எனவே, அவசர அவசரமாகப் பேசவேண்டிய நிலை இருக் கிறது என்று சொன்னேன்.

இனிமேல் தேவை செயல்! செயல்!! செயல்!!!


இங்கேயும் ஏறத்தாழ அதே நிலைதான் - மாற்ற மில்லை. என்றாலும் உங்களையெல்லாம் பார்த்து, உங்க ளுடைய உற்சாகத்தையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்த இளைஞர்களுடைய எழுச்சியையெல்லாம் பார்க்கின்ற பொழுது, இவர்களுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், மற்றவர்கள், தோழர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நின்று, அவர்கள் கொடுக்கின்ற ஆதரவைப் பார்க்கும்பொழுது அதிகம் பேசவேண்டியதில்லை - இனிமேல் தேவை செயல்! செயல்!! செயல்!!! என்பதுதான்.

இந்தப் பகுதிக்கு வரும்பொழுது என்னை அறியாமலேயே ஒரு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி ஏற்படும்.

ஆசிரியர் திராவிடமணி பெயரில் மாநாட்டு அரங்கம்!


இங்கே உரையாற்றிய பிரின்சு அவர்கள், என்னுடைய 75 ஆண்டுகால வரலாற்றைப்பற்றி சொன்னார். நான் மாணவனாக இருக்கும்பொழுது கடலூரில் என்னை தயாரித்து, தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்திற்கு ஒப்படைத்த என்னுடைய ஆசான் - ஆசானபுதூர் பக்கத்தில்தான் இருக் கிறது - அந்த ஊரைச் சார்ந்தவர் அவர். அந்தக் காலத்தில் அவர் ஆ.சுப்பிரமணியமாக இருந்தார்கள். தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்திற்கு வந்து, அவருடைய பெயரை திராவிடமணி என்று மாற்றிக்கொண்டார். எனக்கு வகுப்பிலும் அவர் ஆசிரியர்; இயக்கத்திலும் எனக்கு அவர் ஆசிரியர். நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு அவர் தலைமை ஆசிரியர். ஆகவே, அவர் எங்களையெல்லாம் பக்குவப்படுத்தினார். அவருடைய பெயரை, நம்முடைய இளைஞரணி தோழர்கள் நினைவூட்டக்கூடிய வகையில், நன்றி காட்டக் கூடிய வகையில் இந்த அரங்கத்திற்கு அவருடைய பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

சந்திரராசு அவர்களின் பெயரில் மேடை!


அதேபோல, இந்தப் பொன்னேரி பகுதியில் பகுத்தறிவாளர் கழகத்தை மிகச் சிறப்பாக நடத்திய சந்திரராசு அவர்களின் பெயரை இந்த மேடைக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

இறுதிவரை கொள்கையில் ஒரு சிறு அளவுகூட வழு வதாவர் நம்முடைய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் வாழக்கூடிய ஆசிரியர் சந்திரராசு அவர்களா வார்கள்.

அவர் ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி. அவருக்கு நெருக்க டியான நேரத்தில், நினைவை இழந்த ஒரு காலகட்டத்தில், சென்னையில் சுபேதா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய வாழ்விணையர் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தார். நீண்ட நேரம் அவரால் காத்திருக்க முடியாது என்றால், அவருக்கு சிறப்பு செய்து வழியனுப்பி வைத்தோம்.

அதே சுபேதா நர்சிங் ஹோமில்தான், நான் மம்சாபுரத்தில் தாக்கப்பட்டு, மூக்குப் பகுதிகள் எல்லாம் உடைக்கப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்டேன். அதனால், எனக்கு அந்த மருத்துவமனை பரிட்சயமானது. அந்த மருத்துவமனையில் அவரை சென்று நான் பார்த்தேன். அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்தார்.

கடவுளை நம்பியிருந்தால், உங்களிடம் வரவேண்டிய அவசியமே இல்லை


அங்கே வந்த மருத்துவர் என்னிடம் சொன்னார், சந்திரராசு அவர்களின் மூளையின் பகுதியில் ஒரு கட்டி இருந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பதற்காக, சந்திரராசு அவர்களிடம் நீங்கள் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று எல்லோரிடமும் சொல்வதுபோல், அவரிடமும் சொல்லிவிட்டோம்.

ஆனால் அவரோ, நான் ஒரு பெரியாரிஸ்ட், நான் ஒரு பகுத்தறிவுவாதி. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. உங்களை நம்புகிறேன். உங்கள்மேல் நம்பிக்கை வைத்துத் தான் இந்த அறுவை சிகிச்சைக்காக வந்திருக்கிறேன். நான் கடவுளை நம்பியிருந்தால், உங்களிடம் வரவேண்டிய அவ சியமே இல்லை என்றாராம் கடைசி காலகட்டத்தில். இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் திராவிடர் இயக்கம். இந்தத் துணிச்சலைத்தான் தந்தை பெரியார் அவர்கள், நமக்கு இரத்தத்தில் ஊட்டிய உணர்வு.

அதுபோலவே, இங்கே வரும்பொழுதுகூட,  வளர் தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்,  அவரும், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்தப் பகுதியில் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு அடித்தளமாக இருந்தனர் அந்தக் காலத்தில். மாணவப் பருவத்தில் எங்களையெல்லாம் அழைத்து வந்தவர்கள் அவர்கள்.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நீங்கள் ஈரோட்டிற்கு வந்துவிடுங்கள்!''


திராவிடமணி எனக்கு ஆசிரியராக இருந்தார் என்பது மட்டும் அவருக்குத் தகுதியல்ல; அதைவிட மிக முக்கியம் தந்தை பெரியார் அவர்கள், கடலூர் மாநாட்டில் கலந்து கொண்டு,  என்னுடைய ஆசிரியர் அவர்களின் உழைப்பைப் பார்த்து வியப்படைந்து, உடனடியாக நீங்கள் ஈரோட்டிற்கு வந்துவிடுங்கள்; தற்போது நீங்கள் வகிக்கின்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

எதைப்பற்றியும் அவர் கவலைப்படாமல், உடனடியாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடலூரில் உள்ள கிரவுனட் மார்க்கெட் கமிட்டி என்ற நிறுவனத்தில் அவர் ஒரு பெரிய அதிகாரியாக இருந்தார். அந்தப் பதவியை  எழுதிக் கொடுத்துவிட்டு, நேரே ஈரோட்டிற்குச் சென்றார். ஈரோட்டில் உள்ள குடிஅரசு அலுவலகத்திற்குச் சென்றார். இது நடந்தது 1944-1945 காலகட்டத்தில், நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறியது சேலம் மாநாட்டில்.

தலைவராக தந்தை பெரியார்; செயலாளர்களாக இரண்டு பேர்!


நீதிக்கட்சிக்குத் தலைவர், திராவிடர் கழகத்திற்கு நிரந்தரத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள். செயலாளராக இரண்டு பேரை அய்யா அவர்கள் நியமனம் செய்தார்கள்.

ஒருவர், அய்யாவின் வார்த்தையில், சீலன் அண்ணா துரை - அறிஞர் அண்ணா அவர்கள். இன்னொருவர் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.

அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அண்ணா அவர்கள் பிரச்சாரத்திற்காக அடிக்கடி வெளியூ ருக்குப் போகவேண்டி இருக்கிறது. ஆகவே, தலைமை நிலையத்தில் இருந்து, கடிதங்கள், போக்குவரத்து இவை அத்தனையும் செய்கின்ற பொறுப்பு ஆசிரியர் திராவிடமணிக்கே உண்டு என்று சொல்லி, அவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு விடுதலை நாளிதழின் நிர்வாகியாக அவர்கள் இருந்தார்கள். இப்படி எத்தனையோ பதவிகளை அவர் வகித்தார்.

திராவிடமணி அவர்களுடைய சொந்த சகோதரர் ஆ.சண்முகம்


அதுமட்டுமல்ல, இயக்கத்தினுடைய ஒரு சிக்கலான கட்டம் என்று சொன்னால், தந்தை பெரியார் திருமணத்தையொட்டி ஏற்பட்ட சூழல், 1949 ஆம் ஆண்டில்.

அந்த சிக்கலான காலகட்டத்தில், தந்தை பெரியாருக்கு உதவியாளராக, அவருடைய பேச்சுகள், குறிப்புகள் அத்த னையும் எழுதக்கூடியவராக யார் இருந்தார் என்றால், திராவிடமணி அவர்களுடைய சொந்த சகோதரர் ஆ.சண் முகம் என்பவர். ஆசானபுதூர் தோழர்களுக்குத் தெரியும். அவர்தான் தந்தை பெரியார் அவர்களுடைய செயலாளராக அந்த மிக முக்கியமான காலகட்டத்திலும், பல ஆண்டுகளாக இருந்தார்.

ஆசானபுதூருக்கும், எங்கள் ஆசானுக்கும்....


எனவேதான், ஆசானபுதூருக்கும், எங்கள் ஆசானுக்கும்,  இந்த இயக்கத்திற்கும், இந்த வட்டாரத்தில் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்பது ஒரு வரலாறு.

ஆனால், அதற்குமுன்னாலேயே மிகப்பெரிய வரலாறு, சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்த, எல்லோருக்கும் கல்வியைத் தந்த கல்வி வள்ளலாக நீதிக்கட்சியில் திகழ்ந்த டாக்டர் நடேசனாரைத் தந்த பகுதி இந்தப் பகுதி.

நடேசனார் இல்லை என்றால், ஆர்.கே.சண்முகம் இல்லை. உலகம் முழுவதும் சென்றவர்கள். வசதியாக இருந்தாலும்  அவர் கிறித்துவ கல்லூரியில் படித்தார். சென்னைப் பல்கலைக் கழகம் என்கிற வருகின்ற நேரத்தில், அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது.

நடேசனார் நடத்திய விடுதியில் படித்தவர் டி.எம்.நாராயணசாமி பிள்ளை


எனக்குத் துணைவேந்தராக இருந்தவர் டி.எம்.நாரா யணசாமி பிள்ளை அவர்கள். அவரெல்லாம், நடேசனார் நடத்திய விடுதியில் படித்தவர். இப்படி ஒரு பெரிய பட்டி யலையே சொல்லலாம், ஆனால், நேரமில்லை. ஆகவே, அப்படிப்பட்ட ஆசிரியருடைய பெயரை வைத்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரிடையாக சில செய்திகளுக்கு வருகிறேன். நேரம் அதிகமில்லாத காரணத்தினால், என்னுடைய உரை குறைவான நேரத்தில் அமைந்துவிடுகிறது என்று சொன்னாலும்கூட, உங்களை நோக்கி அன்போடு கேட்டுக்கொள்வது, இந்தக் கருத்துகளை விளக்கி பல புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கின்றோம். அது வியாபார நோக்கத்தோடு அல்ல; உண்மைகளை உங்களிடம் பரப்பவேண்டும்; இளைஞர்களாகிய நீங்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக - எல்லாம் மலிவு விலைப் புத்தகங்கள் - அவற்றை வாங்குங்கள், படியுங்கள், பிறருக்கும் கொடுங்கள் - சிந்திக்கச் செய்யுங்கள் - நமக்கு உண்மைகள் களபலி ஆகின்றன - உண்மைகளை எப்படியெல்லாம் மாறி சொல்லுகிறார்கள் என்பதால், அவர் கள் பொய்யைப் பிரச்சாரம்  செய்யும்பொழுது, உண்மையை நாம் எடுத்து விளக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

சுயமரியாதை சங்கநாதத்தை செய்யக்கூடியவர்களாக...


இன்று காலையில்கூட இந்த மாநாட்டிற்கு வருவதா? இல்லையா? என்று சொல்கிற அளவிற்கு, நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக, முகநூலில் தவறான செய்தியை பரப்புகின்றனர். வெளிநாட்டில் உள்ள என்னுடைய பிள்ளைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள்.

நோய் எப்பொழுது வேண்டுமானாலும் வரும், மருத்துவமனைக்குச் செல்லலாம்; ஆனால்,  ஒருவர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்படுகிற கூட்டம் நம் நாட்டில் இருக்கிறது என்றால், அது எப்படிப்பட்ட கூட்டம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். மருத்துவமனைக்கு என்ன, சுடுகாட்டிற்கே நீங்கள் போகச் சொன்னால்கூட, அதையும் நாங்கள் சூளுரையாக ஏற்பவர்களாக இருப்போம். சுயமரியாதை சங்கநாதத்தை செய்யக்கூடியவர்களாக இருப்போம்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்த மாநாடு மிக அற்புதமாக தோழர்களின் கடும் உழைப்பினால் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், உண்மை சந்தாக்களை வசூலித்துக் கொடுத்த தோழர்களுக்கும், கடைவீதியில் சென்று நன்கொடைகளைக் கேட்டபொழுது, தாராளமாகக் கொடுத்த வணிகப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் என்னுடைய மகிழ்ச்சியையும், பாராட்டையும், நன்றியையும், ஒத்துழைக்கின்ற காவல்துறையினருக்கும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள்!


அருமை நண்பர்களே! இந்த இயக்கத்தைப்போல, இந்தியாவில் அல்ல, உலகத்தில் வேறு இயக்கம் உண்டா?

தந்தை பெரியார் சொன்னார், என்னுடைய தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று சொன்னார்.

திராவிடர் கழகத் தோழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொன்னால், இளைஞர்கள் எல்லோரையும் சேர்த்துத்தான் தொண்டர்கள். வயது வித்தியாசமே அதில் கிடையாது. 90 வயதாக இருந்தாலும் சரி - எங்களுடைய இரத்தினசாமி அவர்களும் இளைஞர்தான்; சிவசாமி அவர்களும் இளைஞர்தான். காரணம், இளைஞர் என்பது வயதைத் பொறுத்ததல்ல; மனதைப் பொறுத்தது. அந்த உறுதியைப் பொறுத்தது.

நாங்கள் எல்லோரும் இளைஞர்கள்தான். இந்த இயக்கத் தில் வயதானவர்கள் யாரும் கிடையாது. என்ன இப்படி சொல்கிறேனே என்று நினைக்கவேண்டாம். எங்களுடைய தலைவர் 95 வயது வரையில் வாழ்ந்த இளைஞர். அப்படிப்பட்ட ஒரு உணர்வை நாங்கள் பெற்றுக்கொண்டு, இந்தப் பணியை செய்கிறோம்.

அப்படிப்பட்ட தொண்டர்களைப் பார்த்துத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று சொன்னார்.

துறவியாக இருப்பவர்கள் எல்லாம் சிறைச்சாலையில் இருக்கிறார்கள்!


ஆனால், இன்றைக்குத் துறவியாக இருப்பவர்கள் எல்லாம் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். துறவிகள் கிடையாது சாமியார்கள்; எல்லாம் காவி சாமியார் பயல்கள்; அய்டெக் சாமியார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் போன்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. நிறைய சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். அந்தப் பட்டியலை சொல்வதற்கு நேரமில்லை என்கிற காரணத்தினால், சில பெயர்களை மட்டும் சொல்கிறேன்.

நம்முடைய இயக்கக் கொள்கையில் மிக முக்கியமான ஒரு கொள்கை. நடைமுறைத் திட்டம் என்னவென்றால், திக்கெட்டும் பாய்வோம்; திராவிடத்தைக் காப்போம் என்பதுபோன்று, ஜாதிகள் இல்லாத நாடு - சாமியார்கள் இல்லாத நாடு இவற்றை உருவாக்கவேண்டும்.

ஏனென்றால், இந்தச் சாமியார் பயல்கள் பெண்களைப் படுத்துகின்றபாடு இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. காவி அணிந்திருந்தாலே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சுரங்கம் வைத்தி ருக்கிறான். இவர்கள் எல்லாம் முற்றும் துறந்த முனிவன். முற்றும் துறந்தவன் யோக்கியதையா இது. ஆன்மிகம் என்கிறார்கள். ஆன்மிகம் என்று சொல்கின்ற பயல்கள் எல்லாம் பின்னாளில் சிறைச்சாலைக்குச் செல்வார்கள் என்று அர்த்தம்.

இந்து பத்திரிகையில்  வெளிவந்த செய்தி!


இதோ என்னுடைய கைகளில் இருப்பது இந்து பத்திரிகை 26.4.2018 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதில்,

A self-styled godman who fancied a lavish lifestyle
Not long ago, self-styled godman Asaram, convicted in a rape and sexual assault case on Wednesday, was a powerful preacher with 20 million followers, running 425 ashrams and 50 gurukuls in a dozen countries and presiding over a Rs. 5,000 crore business empire.

Born in what is now Pakistan’s Sindh province in 1941, his family moved to Gujarat after Partition and settled in Ahmedabad’s middle and lower middle class Maninagar area.

Sometime in the 1960s, Asumal Harpalani became Asaram and set up a small ashram on the banks of the Sabarmati in the Motera area of Ahmedabad.
The spotless white dhoti and kurta, and a snow-white beard to match, made him look the part and that combined with a growing list of quotable quotes including life tips - on everything from marital bliss to cures for cancer - and ashrams selling all sorts of consumer products like soaps, shampoos and ayurvedic medicines, helped him sustain the air of godliness and win more and more followers every day as his stature grew.

Massive following
In Gujarat, Madhya Pradesh, Maharashtra, Rajasthan, Chhattisgarh and Uttar Pradesh, where most of his ashrams and gurukuls were set up, he created a massive following, mainly among tribals, the Backward Communities and Sindhis.

However, for 79-year-old Asaram, who transitioned from Asumal Harpalani to Asaram, allegations of criminality and controversies were nothing new as he reportedly started as a liquor bootlegger in “dry” Gujarat.

Though he preached that “morality cannot survive in the absence of spirituality and materialism inevitably brings sorrow and misery”, he developed a taste for the good and lavish life.

Soon, as the number of ashrams rose and the follower base grew, so did his desires for material life.

He got a fleet of luxurious cars but preferred to travel by Mercedes or BMW, hired choppers to fly from one ashram to another and enjoyed VVIP status at airports, avoided getting frisked and used to be taken to aircraft in special convoys often escorted by police.

இதன் தமிழாக்கம் வருமாறு:

சாமியார் என்று சொல்லிக்கொள்பவரின் பகட்டான வாழ்க்கை


சமீபத்தில் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்ற சாமியார் ஆசாராம் பாபு லட்சக்கணக்கானோரை சீடர்களாக கொண்டவர்.  நாடு முழுவதும் 425 ஆசிரமங்கள், 50 குருகுலம் என்ற உண்டு உறங்கி படிக்கும் வசதியுடைய பள்ளிகள். மேலும் 5,000 கோடி கைமாறும் பெரும் வணிக நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் 1941 ஆம் ஆண்டு பிறந்த இவரது குடும்பம் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் குஜராத்திற்கு இடம் பெயர்ந்தது. அகமதாபத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் மணிநகர் பகுதியில் வளர்ந்தார். 1960 ஆம் ஆண்டு அஸுமல் அர்பலானி பிற்காலத்தில் ஆசாராம் என்று அழைக்கப்பட்ட சாமியார் சபர்மதி நதிக்கரையில் மோதிரா சிறிய ஆசிரமம் ஒன்றை துவக்குகிறார்.

வெள்ளைக்கலர் குர்தா, அதே கலரில் புள்ளிவைத்த மேல்சட்டை, வேட்டியுடன் பவ்யமாகத் தோன்றும் இவர் ஆரம்பத்தில் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி வந்தார். கூட்டம் சேரச் சேர தத்துவங்களைக் கூற ஆரம்பித்தார். பிறகு தனது சக்தியால் புற்றுநோயைக் கூட குணமாக்கிவிடுவேன் என்று மக்களை நம்ப வைத்தார். அதன் பிறகு தனது ஆசிரமத்தை விரிவுபடுத்தி சோப்பு, உள்ளிட்ட பொருட்களை விற்க ஆரம்பித்தார். அவரது பக்தர்கள் இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவரது பக்தர்கள் இத்தனை பேருக்கு இதை விற்பனைசெய்யவேண்டும் என்று வற்புறுத்தினர். இதன் காரணமாக அவரது வணிகம் பெருகியது.    நூற்றுக்கணக்கான சீடர்கள்

இவருக்கு குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மற்றும் உத்திரப்பிரதேசத்தில் சீடர்கள் அதிகம் உள்ளனர். இவர் நடுத்தர வர்ககத்தினர், பழங்குடியினர், சிந்தி பிரிவினர் இவரது சீடர்களாயினர். கூட்டம் கூடக்கூட பணமும் பெருகியது. பணம் பெருகும் போது தொடர்ந்து இவரது ஆசிரமத்தில் பல முறைகேடுகள் நடக்கத் துவங்கியது. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் இவரது ஆசிரமத்தில் விலை உயரந்த மதுபானங்கள் ஆறாக ஓடியது.

ஆன்மிக வாதிகள் நன்னெறி தவறினால் அவர்களுக்கு துயரமும், பெருங்கவலையும் வந்து சேரும் என்று இவரே பல மேடைகளில் கூறியதுண்டு. அதாவது பல கோடிகளில் புரண்டு கொண்டு ராஜவாழ்க்கை வாழ்ந்துகொண்டு, தத்துவமும் கூறிக்கொண்டு வந்தார். இவரது வாழ்க்கைக்கும், இவர் கூறும் போதனைக்கும் எள்ளளவும் தொடர்பிருந்ததில்லை.

நாடு முழுவதும் இவருக்கு ஆசிரமங்கள் பெருகப் பெருக சீடர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. இதன் விளைவாகப் பணம் கொட்டத் தொடங்கியது. தன்னுடைய சொந்தப் பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள கார்கள் பலவற்றை இறக்குமதி செய்துள்ளார். மேலும் தனக்கென சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் இவர் வைத்துள்ளார். இது ஆசிரமத்திலிருந்து வேறு ஆசிரமத்திற்குச் செல்ல இந்த ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவார். மேலும் அயல்நாடுகளுக்குச் செல்லும் போது மிகமுக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் விமானத்தில் பயணம் செய்வது, அதிமுக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் அனைத்தும் உயர் பாதுகாப்பு படைப்பிரிவு இவருக்கும் உண்டு. இதன் மூலம் இவர் ஒரு ராஜாவைப்போல் வாழ்ந்து வந்தார்.

திமிர் பிடித்தவர்களின் முதுகெலும்பை உடைப்பதுதான் எங்களுடைய இளைஞர்களின் வேலை


நம்மாட்கள் எல்லாம் அன்றாடம் காய்ச்சிகள். அருள் மொழி அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார், நீட் தேர்விற்காக, கம்மலை அடகு வைத்து, ரயிலுக்கு டிக்கெட் போடுகிறார்கள் நம்முடைய மாணவர்கள் என்று.

அதை எவ்வளவு கொச்சைத்தனமாக பேசியிருக்கிறார் கள் பாருங்கள், சரி, ரயில் டிக்கெட்டுக்கே கம்மலை அடகு வைத்தார்கள் என்றால், சீட்டு பிடிக்க என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்று சொல்கின்ற திமிர் இருக்கிறது என்றால், அந்தத் திமிர் பிடித்தவர்களின் முதுகெலும்பை உடைப்பதுதான் எங்களுடைய இளைஞர்களின் வேலை.

இந்தக் கலாச்சாரத்தை, இந்த அனாசாரத்தை ஒழிப்பதுதானே எங்களுடைய வேலை!

ஏண்டா, எங்கள் தாய்மார்கள், எங்கள் சகோதரிகள் வறுமையில் இருந்துகொண்டு, வேறு வழியில்லாமல் இதைச் செய்தால், இப்படி பேசுவீர்களா? ஏண்டா, அய்ந்து பேருக்கு மனைவியாக இருக்கின்றவளையே அடகு வைத்து சூதாடிய பயல்கள் நீங்கள். அவளும், அய்ந்து பேரும் போதாதென்று, ஆறாவதாக ஒருவன்மீது ஆசைப்பட்டு, மரத்திலிருந்து கீழே விழுந்த பழம் மீண்டும் ஒட்டிக்கொண்டது என்று கதை எழுதி வைத்திருக்கிறான். இதுதான் உன்னுடைய பாரதக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரத்தை, இந்த அனாசாரத்தை ஒழிப்பதுதானே எங்களுடைய வேலை. அதற்காகத்தானே இந்த மாநாடு.

இந்தியாவிலேயே இப்படி ஒரு கூட்டம், தற்கொலை பட்டாளம் வேறு கிடையவே கிடையாது.

இளைஞர்கள் இங்கே தீர்மானம் போட்டிருக்கிறார்களே, வெறும் தீர்மானத்தை மட்டும் போட்டு விட்டுச் செல்கிற வர்களா? அல்லது கைதட்டிவிட்டுப் போகிறவர்களா? எங்க ளுடைய தோழர்கள்.

எங்கள் தோழர்கள்  எதை நம்பி எங்களிடம் வருகிறார்கள்?


எதை நம்பி எங்களிடம் வருகிறார்கள்; நாங்கள் என்ன ஆசை காட்டியிருக்கிறோம். சாமியார்கள் ஆகுங்கள் என்று நித்தியானந்தா மாதிரி எத்தனையோ பேர் வசதியாக இருந்து விதம் விதமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அதுபோன்று எத்தனை பேர் சாமியார்களாக இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாதா?

பெரியார் சொன்னாரே, என்னையே கடவுள் அவதாரம் என்பானே? நான் கொஞ்சம் அசந்தால்.

எப்படிப்பட்ட ஒரு பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்? எங்கள் தோழர்கள் எதை நம்பி எங்களிடம் வருகிறார்கள்?

உங்களை எம்.எல்.ஏ., ஆக்குவோம்; உங்களை எம்.பி., ஆக்குவோம்; அல்லது குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்துத் தலைவராக்குவோம் என்று சொல்லியாவது எங்கள் தோழர்களுக்கு ஆசை காட்டுவோமா? என்றால், எதற்கு ஆசைப்பட்டாலும் இங்கே இடமில்லை. இந்த இயக்கம் அப்படிப்பட்ட இயக்கம்.

உங்கள் பின்னால் வந்தால் என்னதான் கொடுப்பீர்கள்? என்னதான் செய்வீர்கள்? என்றால், தெளிவுபடுத்தித்தான் இங்கே வந்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள் - அதைப் பாராட்டவேண்டும். இவர்கள் ஒன்றும் மயக்கத்தில் இங்கே வரவில்லை. பதவி போதை, மத போதை, ஜாதி போதை, சினிமா போதை போன்ற போதைகளுக்கு ஆட்பட்டு இங்கே அவர்கள் வரவில்லை. உறுதியோடு இங்கே வந்திருக் கிறார்கள்.

கொள்கைக்காக என்னையே நான் இழப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதியோடு...


நான் இந்த நாட்டின் குடிமகன் என்று சொன்னால்,  இந்த நாட்டில் சமத்துவத்தை உருவாக்கவேண்டியவன். ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற, பெண்ணடிமையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக உழைப்பேன். அதற்காகவே, 95 ஆண்டுகாலம் உழைத்த தந்தை பெரியாருடைய கொள்கைதான், இந்த மண்ணின் இந்த மக்களை உயர்த்தும். ஆகவேதான், அந்தக் கொள்கையின்மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. அந்தக் கொள்கைக்காக என்னையே நான் இழப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதியோடு எங்கள் இருபால் தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

நாளைக்கு நாங்கள் போராட்டம் என்று அறிவித்தோம் என்றால், ஆயிரக்கணக்கில் வருவதற்கு இந்த இளைஞர்கள் தயாராக இருப்பார்கள். (இருப்பீர்களா? இல்லையா? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இளைஞர்களைப் பார்த்து கேட்க, இருப்போம், இருப்போம் என்று உற்சாகத்துடன் பதிலளித் தனர்).

அதுதான் மிக முக்கியம். அதுவும் சிறைச்சாலைக்குக் காலையில் சென்று, மாலையில் விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு வருபவர்கள் கிடையாது நாங்கள்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 16.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக