புதன், 30 மே, 2018

கா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு



சென்னை, மே 20- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்குரல் ஒலித்தவரும், பவுத்தம் வளர்த்து ஆரியம் வீழ்த்தியவரும், 1907ஆம் ஆண்டில் ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் தமிழ் ஏட்டைத் தொடங்கி, தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி தமிழுணர்வு வளர்த்தவருமான பெருந்தகையாளர் கா.அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் 173ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு, சேத்துப்பட்டு - பிருந்தாவன், எஸ்.எம். நகர், அண்ணல் அம்பேத்கர் திடலில் உள்ள அன்னாரது சிலைக்கு வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 20.5.2018 அன்று காலை 9.30 மணிக்கு மாலையணிவிக்கப்பட்டது.

வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் மாலையணிவித்தார். “தென்னிந்திய  சமூகப் புரட்சியாளர் அயோத்தி தாச பண்டிதர் வாழ்க” என வாழ்த்து முழக்கங்கள் முழங்கப்பட்டன.

கழகத் தோழர்களுக்கும், குழுமிய பொதுமக்களுக் கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அருகிலமைந்த திராவிட மாமணி இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கும் மாலையணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோ தரன், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் சோ.சுரேசு, ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழும்பூர் பகுதி செயலாளர் சேத்துப்பட்டு இளங்கோ, 107ஆவது வட்ட பொருளாளர் கி.டேவிட், பெங்களூர் பேரா சிரியர்  எஸ்.சுந்தரேசன், செம்பியம் கழக அமைப் பாளர் தி.செ.கணேசன், வியாசர்பாடி செயலாளர் கெடார் சு.மும்மூர்த்தி, மயிலை இரா.பிரபாகரன், நிழற்படக்கலைஞர் முரளி கிருட்டிணன் சின்ன துரை, அம்பேத்கர், ஓட்டுநர் இராசேந்திரன், கு.பா.கவிமலர், மு.வளர்மதி, பி.அரவிந்த் உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் கழகத் தோழர் சேத்துப்பட்டு பாபு மோர் வழங்கினார்.

 - விடுதலை நாளேடு, 20.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக