22 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் வழங்கிய 10 உறுதிமொழிகளை திராவிடர் மாணவர் கழகத்தினர் மீண்டும் ஏற்றனர்
1. ஜாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோரை மறு வாழ்வுத் திருமணம் செய்து கொள்வேன். வர(ன்)தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி - என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.
2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் அண்டாத பெரு நெருப்பாக வாழ்வேன்.
3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கு வதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொழுது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.
4. நல்ல உடல் நலமே, நல்ல உள நலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.
5. கடவுளை மற, மனிதனை நினை, என்று அறிவு ஆசான் வழிப்படி மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய் வதை மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை சுகவாழ்வு என நான் வாழ்ந்து காட்டுவேன்.
6. வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.
7. எளிமை, சிக்கனம், பிற பாலரிடம் பண்புடன் பழகும் பான்மையை என்றும் வளர்த்துக் கொள்வேன்.
8. பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எனது இனத்தின் மீட்புக்கான களப்பணியாளனாக என்றும் இருப்பேன்.
9. இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல் தொண்டுக்கான அது வும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்று கருதி என்றும் உழைப்பேன்.
10. மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள். அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார்தம் உயர் ஒழுக்கநெறியான மனிதநேயப் பண்புடன் என்றும் சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக வாழ்வேன்.
திருச்சி, மார்ச் 7- திராவிடர் மாநில மாண வரணி கலந்துரையாடல் திருச்சி பெரியார் மாளிகையில் 4.3.2018 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநில மாணவரணி துணை செயலாளர் ச.அஜித்தன் வரவேற்புரையாற்றி னார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை வகித் தார். பின்பு கோவை மண்டல செயலாளர் இராசி.பிரபாகரன் கடவுள் மறுப்பு கூறினார். கலந்துரை யாடல் நிகழ்விற்கு மாநில அமைப் பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் முன்னிலை வகித்தார்.
கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும், பெரியார் அவர்களின் தேவைகளை பற்றியும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மாணவர்களிடத்தில் பேசினார்.
திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், திருச்சி மண்டல தலைவர் நற்குணம், மண்டல செயலாளர் ஆல்பர்ட், விழுப்புரம் மண்டல தலைவர் திண்டிவனம் க.மு.தாஸ், கும்ப கோணம் இளை ஞரணி தலைவர் க.சிவக்குமார், மாநில மாண வரணி துணை செயலாளர்கள் நா.பார்த்திபன், த.மு.யாழ்திலீபன், சென்னை மண்டல மாண வரணி செயலாளர் பா.மணியம்மை, தஞ்சை மாணவரணி தலைவர் பெ.தமிழ்செல்வன், தஞ்சை மண்டல மாண வரணி செயலாளர் அண்ணா மாதவன், தஞ்சை மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ர.மணிகண்டன், திருவொற்றியூர் மாணவரணி தோழர் தமிழ்மில்லர், கோவை மண்டல செயலாளர் ராசி பிரபாகரன், மேட்டுப் பாளையம் மாணவரணி தலைவர் அறிவுமணி, தஞ்சை சரபோஜி கல்லூரி மாண வரணி இரா.அரவிந்த், கும்பகோணம் மாவட்ட அமைப்பாளர் அ.திருநாவுக்கரசு, திருவொற்றியூர் மாணவரணி தோழர் வெண்ணிலா உள்ளிட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசுகையில்:- திராவிடர் மாணவர் கழகத்தின் மாநில மாநாடு ஜூலை 8 எனவும் இம்மாநாட்டை கும்பகோ ணத்தில் நடத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இசைவு தந்துள்ளதாகவும் அறிவித்தார். மாணவர்கள் எழுச்சியுடன் ஆரவாரத் துடன் கையொலி எழுப்பி வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் 1943இல் இதே கும்பகோணத்தில் தொடங்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகத்திற்கு “பவளவிழா” மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது எனவும், சிறப்பாக அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் “மாணவர் பருவம் தான் தனி முத்திரை பதிக்கும் பருவம்“ எனவும், மாண வர்கள் நிச்சயம் தந்தை பெரியாரின் கொள்கைகளை மற்ற மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும், கருப்பு சட்டை அணிந்து கொள்ள நாம் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் “கருப்புசட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்” கருப்புடை அணிந்த கருஞ்சட்டை மாணவர்கள் தமிழ்நாட்டிற்கே காவலர்கள் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி பருவங் களில் இயக்க கொள்கைகளை நடைமுறைப் படுத்த தாம் பழகி கொண்டது. இயக்கத்தில் இருந்த தால் ஒழுக்கமுடையவனாகவும், மற்ற மாணவர் களுக்கு தலைமை தாங்கக்கூட, வாய்ப்புகள் வந்தது என்றெல்லாம் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின்பு இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில், அறிவியல் மனப்பாண் மையை வளர்க்க வேண்டும் என்ற 51கி(பி) இன்று நிர்மூல மாக்கப்பட்டுள்ளது என்றும், மூடநம்பிக் கைக்கு எதிரான சட்டம் இன்று கிடப்பில் போடப்பட்டு மூடநம்பிக்கை வளர்ச் சிக்கு பயன்படுகிறது எனவும், லட்சியம் நோக்கி லட்சம் மாணவர்களை என்ற முழக்கத்தோடு ஒருங் கிணைக்க நம்மால் முடியும். நம்மால் மட்டுமே முடியும். இதற்கு கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.
சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்வு தமிழ் நாட்டு மாணவர்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி மாணவர் அமைப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் மாணவரணி தோழர்களுக்கு பெரி யாரியலை சார்ந்து எதேனும் சந்தேகங்கள் இருப்பின் நிச்சயம் அது களையப்படும். இதற்கு எப்போதும் தலை மைக்கழகம் தயாராக உள்ளது எனவும் மாண வரணி தோழர்கள் பள்ளி மற்றும் கல்லூரி அதன் விடுதிகளிலும் அய்யாவின் கருத்துகளை வீரியத் துடன் செயல்படுத்த வேண் டும். அதற்கு விடு தலையை அங்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி மாண வரணி தோழர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்து களோடு தனது உரையை முடித்தார்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய மாநில மாண வரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கழகத்தின் செயல்பாடுகளும், கழகம் பிரச்சினை களை எப்படி கையாளுகின்றது என்பவை பற்றியும் எடுத்துரைத்தார். இந் நிகழ்வின் சிறப்பம் சமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் மாணவர் கழகத்தினருக்கு வழங்கிய 10 கட்டளைகளை நினைவுப்படுத்தும் விதத்தில் உறுதிமொழி களைக் கூற அனைத்து மாணவர் களும் எழுந்து நின்று உறுதி எடுத்துக் கொண் டனர். பின்பு மாநில அமைப்பாளர் புதிய பொறுப்பாளர்களை நியமித்ததை அறிவித்தார். காலத்தின் இச்சூழலுக்கு ஏற்ப, கல்வியுரிமை நிலை நாட்ட மாநில மாணவர் கலந்துரையாடலில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங் களை முன்மொழிந்து வழக்குரைஞர் திண்டிவனம் தம்பி.பிரபாகரன், சட்டக் கல்லூரி மாணவர் - பிரவின் குமார், சென்னை இ.ப.சீர்த்தி, தஞ்சை பர்தீன், தஞ்சை இ.பொ.பகுத்தறிவு, கும்பகோணம் விக்னேஷ், தர்மபுரி மா.செல்லதுரை, புவனகிரி சா.வீரமணி, கோவை ராகுல் ஆகியோர் உரையாற்றினர்.
மாநில மாணவர் மாநாட்டிற்கு தேதி கொடுத்த தமிழர் தலைவருக்கு நன்றி அறி விக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டினை வரவேற்கும் விதமாக இயக்க நண்பர்கள் மாநாட்டு நிதியாக ரூ. 2700 கலந்துரையாடலில் பொதுச் செயலாளரிடம் வழங்கி நிதி சேர்ப்பைத் தொடங்கி வைத்தனர். இறுதியாக தோழர் தஞ்சை முல்லை நன்றியுரை கூறினார். கூட்டத்தில் திராவிடர் மாணவர் கழகத்தோழர்களோடு திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் பங்கேற்று ஊக்கமளித்தனர்.
புதிய பொறுப்பாளர்கள்
திராவிடர் கழக மண்டல மாணவரணிச் செயலாளர்கள்
1. பா.மணியம்மை - சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர்
2. அ.அர்ஜூன்- காஞ்சிபுரம் மண்டல மாணவரணிச் செயலாளர்
3. எ.சிற்றரசு - தர்மபுரி மண்டல மாணவரணிச் செயலாளர்
4. தே.அ.ஓவியா- வேலூர் மண்டல மாணவரணிச் செயலாளர்
5. வீரமணி- கடலூர் மண்டல மாணவரணிச் செயலாளர்
6. இ.தமிழர்தலைவர் - சேலம் மண்டல மாணவரணிச் செயலாளர்
7. தினேஷ்பாபு - திருச்சி மண்டல மாணவரணிச் செயலாளர்
8. இரா.சி.பிரபாகரன்- கோவை மண்டல மாணவரணிச் செயலாளர்
9. அண்ணா. மாதவன்- தஞ்சை மண்டல மாணவரணிச் செயலாளர்
10. கோ.சதீஷ் - புதுக்கோட்டை மண்டல மாணவரணிச் செயலாளர்
11. நாத்திக.பொன்முடி- திருவாரூர் மண்டல மாணவரணிச் செயலாளர்
12. பொன்.அருண்குமார் -திண்டுக்கல் மண்டல மாணவரணிச் செயலாளர்
13. ப.வெற்றிவேல் - ஈரோடு மண்டல மாணவரணிச் செயலாளர்
14. அ.சவுந்தரபாண்டியன் - நெல்லை மண்டல மாணவரணிச் செயலாளர்
15. சு.சித்தார்த்- மதுரை மண்டல மாணவரணிச் செயலாளர்
16. கா.பெரியார் செல்வன் - அரியலூர் மண்டல மாணவரணிச் செயலாளர்
17. தா.தம்பிபிரபாகரன் - விழுப்புரம் மண்டல மாணவரணிச் செயலாளர்
18. சு.மணிபாரதி - புதுச்சேரி மாநிலம்
மாவட்ட மாணவரணி பொறுப்பாளர்கள்
சென்னை மண்டலம்
வடசென்னை
1. வ.கலைச்செல்வன்- மாவட்ட மாணவரணித் தலைவர்
2. சிற்றரசு - மாவட்ட மாணவரணி துணைத் தலைவர்
3. க.வெண்ணிலா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
4. செ.மில்லர்- மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர்
5. த.பர்தீன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
தாம்பரம் மாவட்டம்
மு.மணிமாறன் -மாவட்ட மாணவரணித் தலைவர்
ச.எழிலரசி -மாவட்ட மாணவரணிச் செயலாளர்
கனிமொழி - மாவட்ட மாணவரணி அமைப் பாளர்
தென்சென்னை
ச.அருண்குமார் - மாவட்ட மாணவரணித் தலைவர்
ஆர்.கவுதம்-மாவட்ட மாணவரணிச் செயலாளர்
கு.பா.அறிவழகன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
ஆவடி மாவட்டம்
எழிலரசி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
சு.எழில் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
காஞ்சிபுரம் மாவட்டம்
1. அ.அரவிந்தன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. கோபிநாத்-மாவட்ட மாணவரணிச் செயலாளர்
அரக்கோணம் மாவட்டம்
1. சூ.வீரமணி - மாவட்ட மாணவரணி தலைவர்
2. லோ.மணியம்மை - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
வேலூர் மண்டலம்
வேலூர் மாவட்டம்
1. அ.ஓவியா - மாவட்ட மாணவரணித் தலைவர்
2. ச.செந்தமிழ் இன்மொழி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. வீ.தமிழ்ச்செல்வம்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம்
1. மு.க.ராம்குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. மு.ராகுல்- மாவட்ட மாணவரணிச் செயலாளர்
தருமபுரி மண்டலம்
தருமபுரி மாவட்டம்
1. ம.முனியப்பன் -மாவட்ட மாணவரணி தலைவர்
2. செல்லத்துரை- மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. வி.பி.சிங் - மாவட்ட மாணவரணி அமைப் பாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
1. வ.வெற்றி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
திருப்பத்தூர் மாவட்டம்
1. சு.நாத்திகன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. மு.வீரமணி - மாவட்ட மாணவரணி செயலாளர்
3. ராகுல் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
விருத்தாச்சலம் மாவட்டம்
1. த.தமிழ்ச்செல்வம் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. செ.இராமராஜன் -மாவட்ட மாணவரணிச் செயலாளர்
சிதம்பரம் மாவட்டம்
1. கனிவண்ணன் -மாவட்ட மாணவரணி தலைவர்
2. உன்னி கிருஷ்ணன் - மாவட்ட மாணவரணி செயலாளர்
3. ச.வீரமணி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
விழுப்புரம் மண்டலம்
விழுப்புரம் மாவட்டம்
1. ச.எடிசன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. கீ.கோ.இலக்கியா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
1. முனியன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
திண்டிவனம் மாவட்டம்
1.வெ.ப.மாரிமுத்து - மாவட்ட மாணவரணி தலைவர்
2. இரா.விஜய் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. ராஜேஷ் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
சேலம் மண்டலம்
சேலம் மாவட்டம்
1. பா.திவ்யபாரதி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
மேட்டூர் மாவட்டம்
1.ஆர்.குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. டி.சத்யா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. இரா.அஜய்பிரசாந் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
ஆத்தூர் மாவட்டம்
1. தமிழ்ச்செல்வம் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. சக்திவேல் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. சே.ஜான்சிராணி- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
கோபி மாவட்டம்
1. கே.தட்சணாமூர்த்தி - மாவட்ட மாணவரணி தலைவர்
2. பாலகிருஷ்ணன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. சி.மதிவதனி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
கோவை மண்டலம்
கோவை
1. ம.சக்திபழனியப்பன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. க.சி.இனியா - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. பு.விமல்பிரகாஷ் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
திருப்பூர் மாவட்டம்
1. கு.திலிபன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. டி.சூரியா - மாவட்ட மாணவரணி செயலாளர்
3. தமிழ்ச்செல்வன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
மேட்டுப்பாளையம் மாவட்டம்
1. அறிவுமணி - மாவட்ட மாணவரணி தலைவர்
2. விக்னேஷ் - மாவட்ட மாணவரணி செயலாளர்
தாராபுரம் மாவட்டம்
1. கி.இளந்தென்றல் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. த.திலீபன் - மாவட்ட மாணவரணி செயலாளர்
திண்டுக்கல் மண்டலம்
திண்டுக்கல் மாவட்டம்
1. செ.அன்புச்செல்வி - மாவட்ட மாணவரணி தலைவர்
2. ஜி.விக்னேஷ் - மாவட்ட மாணவரணி செயலாளர்
3. ஆர்.பார்த்தசாரதி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
பழனி மாவட்டம்
1. சந்துரு - மாவட்ட மாணவரணி தலைவர்
2. த.சண்முகப்பிரியா- மாவட்ட மாணவரணி செயலாளர்
தேனி மாவட்டம்
1. வி.சு. பெரியார் மணி - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
நெல்லை மண்டலம்
திருநெல்வேலி மாவட்டம்
1. ப.சேக் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. ம.பொன்ராஜ்- மாவட்ட மாணவரணி செயலாளர்
3. சகோ - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
தென்காசி மாவட்டம்
1. என்.மனோஜ்குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. திராவிடமணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
கன்னியாகுமரி மாவட்டம்
1. சாஜின் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
தூத்துக்குடி மாவட்டம்
1. ம.தென்னவன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. ஆ.கலைமணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. பா.அருணாச்சலம் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
புதுக்கோட்டை மண்டலம்
புதுக்கோட்டை மாவட்டம்
1. பெ.அன்பரசன் - மாவட்ட மாணவரணி தலைவர்
சிவகங்கை மண்டலம்
இராமநாதபுரம் மாவட்டம்
1. த.முத்துக்குமார் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. கண்ணதாசன் - மாவட்ட மாணவரணி செயலாளர்
3. ஏ.நா.பெரியார்செல்வன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
தஞ்சை மண்டலம்
தஞ்சாவூர் மாவட்டம்
1. வே.தமிழ்ச்செல்வம் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. இரா.செந்தூரபாண்டியன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. மணிகண்டன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
4. பொ.பகுத்தறிவு - மாநகர அமைப்பாளர்
பட்டுக்கோட்டை மாவட்டம்
1. பரமசிவம் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. திராவிடமணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
கும்பகோணம் மாவட்டம்
1. நாக.செந்தமிழன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. அ.அரவிந்தன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. அ.திருநாவுக்கரசு- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
திருச்சி மண்டலம்
திருச்சி மாவட்டம்
1. ம.விஜய் - மாவட்ட மாணவரணி தலைவர்
இலால்குடி மாவட்டம்
1. முனைவர் முரளிதரன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. ரஞ்சித் - துறையூர்
மாவட்ட மாணவரணிச் செயலாளர்
அரியலூர் மண்டலம்
அரியலூர் மாவட்டம்
1. த.ப.சித்திரைக்கண்ணன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. ம.சிந்தனைச்செல்வன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. மு.மதுபாலன் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
புதுச்சேரி மாநிலம்
1. சு.மணிபாரதி - மண்டல மாணவரணி தலைவர்
2. ஏழுமலை - மண்டல மாணவரணிச் செயலாளர்
3. சூர்யா - மண்டல மாணவரணி அமைப்பாளர்
மதுரை மண்டலம்
மதுரை மாவட்டம்
1. கலைச்செல்வி.கே - மாவட்ட மாணவரணி தலைவர்
2. மு.தட்சிணி - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
மதுரை புறநகர்
1. சாதி ஒழிப்பு வீரன்.ச - மாவட்ட மாணவரணி தலைவர்,
விருதுநகர் மாவட்டம்
1. இளம்பரிதி.இரா - மாவட்ட மாணவரணி தலைவர்
2. தமிழ்மணி.சு - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. அ.பெரியார்செல்வன்- மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
திருவாரூர் மண்டலம்
திருவாரூர் மாவட்டம்
1. பிரபாகரன் (நன்னிலம்) - மாவட்ட மாணவரணி தலைவர்
2. சு.தீனதயாளன் - மாவட்ட மாணவரணிச் செயலாளர்
நாகை மாவட்டம்
1. கோழிசெல்வன் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. குமரேசன்- மாவட்ட மாணவரணிச் செயலாளர்
3. அருண்குமார் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
மயிலாடுதுறை மாவட்டம்
1. முகில் - மாவட்ட மாணவரணி தலைவர்
2. மதியழகன்- மாவட்ட மாணவரணிச் செயலாளர்
- விடுதலை நாளேடு, 7.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக