சென்னை, மார்ச் 25- 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்11.30 மணி அளவில் சேப்பாக்கம் எல்லீஸ் சாலையில் உள்ள ச. மகேந்திரன் அலுவலகத்தில் தென்சென்னைமாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணை செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும் சேப்பாக்கம், பல்லவன் நகர் பகுதி புதிய கிளை கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
சேப்பாக்கம், பல்லவன் நகர் பகுதி கிளைக்கழக அமைப்பாளராக சி.ஆனந்தபாபு என்பவர் அறிவிக்கப்பட்டார்.
கழக சொற்பொழிவாளரும், தென்சென்னை மாவட்டத்தில் இருந்து கழக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய வரும் நடிகருமான இனமான நடிகர் பகுத்தறிவு கலைச்சுடர் எம்.ஏ.கிரிதரன் (அழகிரிசாமி) அவர்களின்(மறைவு -12.03.2018, வயது-74) மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கிளைக்கழகம் சார்பில் ச.அருண்குமார் நன்றி கூறினார்.
க.தமிழ்ச்செல்வன், ஈ.குமார், எ.அல்தாப், எஸ்.கண்ணன், சி.மணிகண்டன், தினேஷ், வெங்கடேசன், சுப்பிரமணி, பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 25.3.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக