புதன், 18 ஜனவரி, 2017

வள்ளல் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஜன.17 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று (17.1.2017) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கழகப் பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திராவிடர் இயக்கத் தலைவர்களிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவருமான வள்ளல் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (17.1.2017) கொண்டாடப்படுகிறது.

அவரது 100ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று  சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ் ஆகியோர் கழகத் தோழர் - தோழியர்கள் புடைசூழ மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், சி. வெற்றிச்செல்வி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத் தலைவர்கள் மயிலை சேதுராமன், செங்குட்டுவன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், அரும்பாக்கம் தாமோதரன், விடுதலை நகர் ஜெயராமன், ஜெ. குமார், தரமணி மஞ்சுநாதன், பவானி, மரகதமணி, மங்களபுரம் பாஸ்கர், பெரியார் திடல் தோழர்கள் சுரேஷ், கலையரசன், கலைமணி, உடுமலை வடிவேல்,  தமிழ்குடிமகன், தேனாம்பேட்டை பாஸ்கர், சைதை ஆனந்தன் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

-விடுதலை,17.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக