வியாழன், 12 ஜனவரி, 2017

வெள்ளுடை வேந்தர் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது




சென்னை, ஏப். 27- நீதிக்கட் சித் தோற்றுநர்களுள் முக்கிய மானவரான வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகரா யர் அவர்களின் 163ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2014) சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட முகப்பில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தின் சார்பில் இன்று காலை 10 மணியளவில் திராவிடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர் - தோழியர் புடை சூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் வெள்ளுடை வேந்தர் வாழ்க! நீதிக் கட்சி நிறுவனர் வாழ்க!! சமூக நீதிக் காவலர் வாழ்க!!! என ஒலி முழக்கம் எழுப்பினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் திருமகள், பொதுக் குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு மற்றும் சி.வெற்றிச்செல்வி, மணி யம்மை, தென்சென்னை மாவட் டச் செயலாளர் செ.ரா.பார்த்த சாரதி, பாரதிநகர் வெங்கடே சன், கொடுங்கையூர் தங்கமணி, தங்க.தனலட்சுமி, கோடம் பாக்கம் சண்முக லட்சுமி - மாரியப்பன், சுரேஷ், வை. கலையரசன், கலைமணி, தமிழ்குடிமகன், ஆனந்த், சுகுமார், புரசை.அன்புச்செல் வன், பெரியார் மாணாக்கன், சர்.பிட்டி. தியாகராயர் பேர வையின் மாநிலச் செயலாளர் மகாபாண்டியன் நிர்வாகிகள் நடராசன், மகாலிங்கம், சண் முகம், சுந்தரம், கண்ணை யன், பாலன், ராமசாமி ஆகி யோரும் பங்கேற்றனர்.

-விடுதலை,27.4.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக