சென்னை, ஜன. 25- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
தியாகராயர் நகர்
தந்தை பெரியாரின் 43ஆவது நினைவு நாளான 24.12.2016 காலை 8.15 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு தலைமையில் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி, மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப் பாளர் மு.ந.மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராக வன், சா.தாமோதரன் ஆகி யோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.
கோ.மஞ்சநாதன், ந.இரா மச்சந்திரன், க.தமிழ்செலவன், ந.மணித்துரை, பிரகாசம், ஆகியோர் கலந்து கொண்ட னர்.
சேத்துப்பட்டு
முற்பகல் 11.30 மணிக்கு சேத்துப்பட்டு அம்பேத்தர் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன் அவர்க ளும், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலா ளர் செ.ர.பார்த்த சாரதி அவர் களும் மற்றும் துணைச் செய லாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி பொறுப் பாளர் அ.பாபு தலைமையில் மாலை அணிவித்தனர். ந. இராமச்சந்திரன், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண் டனர்.
-விடுதலை,25.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக