செவ்வாய், 31 ஜனவரி, 2017

பெரியார் பெருந்தொண்டர் மயிலை அ.பக்கிரிசாமியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி


மயிலை அ.பக்கிரிசாமியின் படத்தைத் திறந்து வைத்து கவிஞர் கலி.பூங்குன்றன் உரை பெரியார், காமராசர், அண்ணா சிலைகளுக்கு கவிஞர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப். 16_- சென்னை மயிலாப்பூரை யடுத்த மந்தைவெளியில் உள்ள பூங்காப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தைபெரியார், கல்வி வள்ளல் காமராசர், பேரறி ஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, திரா விடர் கழகக் கொடி ஏற் றும் விழாவும், அதனைத் தொடர்ந்து சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந் தொண்டர் சென்னை மயிலை அ.பக்கிரிசாமியின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சியும்  தென்சென்னை மாவட்ட இளைஞரணித்துணைத் தலைவர் மு.முகிலன் தலை மையில் மாவட்டத் தலை வர் வில்வநாதன் முன்னி லையில் நடைபெற்றது.

பெரியார் பெருந் தொண்டர் மயிலை அ. பக்கிரிசாமி படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவேந்தல் சிறப்புரை ஆற்றினார். மயிலைக் குமார் வரவேற்றார்.

சென்னை மண்டல இளை ஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், மண்டல மாண வரணி செயலாளர் மணி யம்மை, தென்சென்னை இளைஞரணித் தலைவர்  செல்வேந்திரன், செயலா ளர் சண்முகப்பிரியன், மயிலை சாமிநாதன்,  தயா ளன் ஆகியோர் நினைவேந் தல் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் மயிலை சேது ராமன், தரமணி மஞ்சுநா தன், தென்சென்னை மாவட்டத் துணை செய லாளர் அரும்பாக்கம் சா. தாமோதரன், வட சென்னை இளைஞரணித் தலைவர் புரசை அன்பு செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியை யொட்டி அ.பக்கிரிசாமி யின் மகன்கன் இரவி, இரவிக்குமார் மற்றும் மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரப்பிள் ளைகள் உள்ளிட்ட குடும் பத்தினரும், பகுதிவாழ் பொதுமக்களும் திரளாகத் திரண்டிருந்தனர்.

படத்தைத்திறந்து வைத்து திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும் போது,
பெரியார் பெருந் தொண்டர் மயிலை அ.பக் கிரிசாமியின் இரங்கல் நிகழ்ச்சி என்று சொல்லப் பட்டாலும், பெரிய அள வில் துயரப்பட வேண்டிய தில்லை.

இந்திய ஆண்மக் களின் சராசரி ஆயுளை விட ஒன்றரை மடங்கு அதி கமாகவே வாழ்ந்து காட் டியிருக்கிறார். கடவுள் மறுப்பாளர், கருஞ்சட் டைத் தோழர் அப்படி வாழ்ந்து காட்டியிருப்பது மகத்தான வெற்றி.

நீண்ட கால ஆயுளுக்கு பெரியார் கொள்கை வழி செய்தது. கடவுள் இல்லை என்று சொன்னார். கடவுள் என்றால் என்ன? அப்படி இருக்கிறதா? அதற்கு சக்தி உண்டா? என்பதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்கள் பக்தி என்பது பயத்தால் மன நோய் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பகுத்தறிவு, துணிவு உள்ளவர்கள் பெரியார் தொண்டர்கள். தலைவர்க ளுக்கு உள்ள வரலாறு தொண்டர்களுக்கும் உண்டு. நேரில் தொண்டர்கள். சந் தித்த எதிர்நீச்சல்கள் ஏரா ளம். அதில் வெற்றி பெற்றி ருக்கிறார்கள் என் அறியும் போது இதற்கு நிகரான ஒன்று வேறு எந்த அமைப் புக்கும் கிடையாது.

உடல் நலன் பாதிக்கப்பட்ட பிற கும்கூட சக்கர நாற்காலி யில் பெரியார் திடலுக்கு வருகைதருவார். அப்படியே சுலோச்சனாசம்பத் வீட் டுக்கும் சென்றுவருவார். பல பிரமுகர்களை நேரி டையாக அறிந்தவர்.

பொதுத்தொண்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர். மற்றவர்களைப்போல செல்வந்தர் அல்லர். ஒரு வார்டு உறுப்பினர் பதவி கூட கிடையாது. ஆனாலும், அவரைப்பற்றி இப்போது பேசுகின்றோம் என்று சொன்னால் அவர் பெரி யார் கொள்கைகளை ஏற்ற வர் என்பதால்தான். பெரி யார் பெருந்தொண்டர், கருஞ்சட்டைப் பாதையிலி ருந்தார் என்பதுதான் விருது.  தந்தைபெரியார் தொண் டர் என்பதுதான் மிகப் பெரிய  விருது. செல்வத் தால் அல்ல, கல்வியால் அல்ல.

அவர் ஒரு பெரியார் தொண்டர் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் பேச வந் துள்ளோம். அவரை மதிக்க வேண்டும் என்றால், அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்றால், அவர் கொள்கைவழியில் குடும் பத்தினரும் நடக்க வேண் டியது ஒன்றுதான் சரியான அளவுகோலாகும்.

பொது மக்கள் அபிப்ராயம் என் பது வெகுஜன அபிப்ராயம் என்று சொல்லும்போது அவர் கருத்துப்படி வாழ்ந்தால் என்ன லாபம் என்று கருதுவார்கள். அவரைப் போல பெரியார் கொள் கையை ஏற்றுக்கொண் டால் சுயமரியாதை இருக்கும்.

பெரியார் என்ற மாமனி தர் இல்லை என்றால் சுயமரியாதை இருந்திருக் காது. பெரியார் அடிப் படை மனித உரிமையைப் பெற்றுதந்தார். உலகில் எங் குமே இல்லாத வேடிக்கை ஒடுக்கப்பட்டவர்களே, பாதிக்கப்பட்டவர்களே அதை ஏற்றுக்கொள்கிறார் கள்.

அதையும் தாண்டி, அவர் களைத் திருத்துவதுதான் பெரும்பணியாக இருந் துள்ளது. தந்தைபெரியார் தான் தன்மான சிந்தனை உண்டாக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார். பல தலைவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர் களின் செயல்பாடுகள் முடங்கிவிட்டன.

பெரியார் அவர் காலத்தில் வெற்றி பெற்றதுடன், அவர் மறை வுக்குப் பிறகும் அவர் குறித்த தேடல், அவர் தேவைகுறித்து பேசப்படு கிறது. அவர் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, ஏதே னும் ஒருவகையில் அவர் படத்தையேனும் போட்டுக் கொண்டுதான் பொதுவாழ் வில் இருக்க முடியும் என் கிற நிலை உள்ளது. அந்த வகையில் பெரியாரின் தாக் கம் சமுதாயத்தில ஏற்பட் டுள்ளது. மதக்கலவரத்தால் ஒரு இனத்தையே படு கொலை செய்து அந்தக் குருதியை புத்தருக்கு அபி ஷேகம் செய்கின்றார்கள்.

புத்தர் கொள்கையைப் பேசுபவர்கள்கூட மார்க்கம் என்பதுமாறி மதவெறி யானது. பெரியார் ஒருவ ருக்குத்தான் சிறப்பு உண்டு. பெரியார் கொள்கையைப் பின்பற்ற அறிவும், துணி வும் வேண்டும்.. பெரியாரை எல்லோரும் ஏற்கவேண் டிய காலகட்டம் இப் போது வந்துள்ளது. எந்த வித சபலங்களுக்கும் ஆளா காமல், பெரியார் கொள்கை யாளர்கள் வார்டு உறுப்பி னர்கள் ஆவதில்லை.

ஆனால், மக்களுக்காகப் பணி ஆற்றியவர். பெரியார் பெருந்தொண்டர் அ.பக் கிரிசாமிக்குப் பிறகும்  அவர் மகன்கள், தோழர் கள் இயக்கக்கிளை அமைக்க வேண்டும். பெரியார் தொண்டர்கள் பேச்சே கொள்கையைச்சுற்றித்தான் இருக்கும்.

தந்தைபெரி யாருடன் நேரில் பழகியவர், அணுக்கத் தொண்டராக இருந்து போராட்டங் களில் பங்கேற்று அவர் கையாலேயே சான்று பெற்றவர். அரசியல் செல் வாக்கு பெற்றவர்கள் இருக் கலாம், அடித்தளம் பெரி யார்தான். கொள்கையைப் பின்பற்றாதவர்கூட பெரி யார்பற்றிப் பேசவேண்டிய காலம் இது. பெரியார் உலக மயம் ஆகி உள்ளார்.

விதைகள் பழுதுபடாமல் விருட்சமாக மாறவேண் டும். பெரியார் கருத்துக்களை தொடர்ந்து பேச, கிளை அமைக்கப்பட்டு பெரியார் பிறந்தநாள்விழாக் கூட்டம் நடத்த வேண்டும். அந்த விழாவில் பக்கிரிசாமி நினைவைப்போற்றுவது என்பது அவர் கொள்கைப் படி வாழ்ந்துள்ளார் என் கிற மரியாதை அளிப்பதாக இருக்கும்.

மாவட்டத் தோழர்களுடன் அவர் மகன்கள் இணைந்து இயக் கப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு திராவிடர்கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
-விடுதலை,16.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக