வியாழன், 12 ஜனவரி, 2017

மயிலை மாங்கொல்லையில் மாபெரும் தலைவர் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்




சென்னை, செப். 23_- சென்னை மண்டல திரா விடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா மயிலை மாங் கொல்லையில் தமிழர் தேசியத் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. ச.மகேந்திரன் முன் மொழிய மண்டல மாண வரணிச் செயலாளர் மணி யம்மை, ஆ.இர.சிவசாமி வழிமொழிந்தனர். திராவிடர் கழக சென்னை மண்டலத் தலைவர் தி. இரா.ரத்தினசாமி, மண்ட லச் செயலாளர் பன்னீர் செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா .வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, பொதுக்குழு  உறுப் பினர் சைதை எம்.பி.பாலு, மு.ந.மதியழகன், சி.செங் குட்டுவன், மயிலை சாமி நாதன், டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் தென் சென்னை இளைஞ ரணி மாவட்ட செயலா ளர் மு. சண்முகப்பிரியன் தலைமை வகித்தார். பொறியாளர் ஈ.குமார் வரவேற்றார்.  தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன் தொடக்க உரை ஆற்றினார்.

மந்திரமா? தந்திரமா?

விழாவில் புதுவை குமார் குழுவினர் மற்றும் நாத்திகன் ஆகியோர் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவுக் கலை நிகழ்ச் சிகளை வழங்கினர். தமிழ் நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர் சங்கத் தைச் சேர்ந்த எழுத்தாளர் அருணன், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் செ.தமிழ் சாக் ரடீஸ், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர்அ.அருள் மொழி, திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகி யோரின் உரைக்குப் பின் னர் விழா சிறப்புரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.



நினைவுப் பரிசு

நிகழ்ச்சி இணைப்பு ரையை உ.மோகனப்பிரியா வழங்கினார்.கூட்ட முடி வில் மு.முகிலன் நன்றி கூறினார். சிறப்பாக செயல் பட்ட கழகத் தோழர்க ளுக்கு பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் நினை வுப் பரிசினை வழங்கி பாராட்டினார்.

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், விருகம்பாக்கம் கோவிந்தராஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், கோ.வீ. இராகவன் உள்பட ஏராளமானவர் கள் கலந்து கொண்டனர்.

பயனாடை அணிவித்து பாராட்டு

விழா சிறப்புற நடக்க ஒத்துழைப்பை நல்கிய கழகத் தோழர்கள் வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், மகேந் திரன், முகிலன், விஜயக் குமார், ஓவியச் செல்வன், ஜெயப்பிரகாஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செங்குட்டுவன், சிவசாமி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத் தய்யன், மண்டலத் தலை வர் இரத்தினசாமி, பொறி யாளர் மயிலை குமார், தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், விஜய ராஜா, தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சண்முகப் பிரியன்,  சென்னை மண் டல இளைஞரணிச் செய லாளர் செ.தமிழ்சாக்ரட் டீஸ், தளபதி பாண்டியன், கார்வேந்தன், அன்பு, இரவி, இரா.பிரபாகரன் உள்பட பலரையும் தமி ழர் தலைவர் பாராட்டி பயனாடை அணிவித்தார்.



கறுப்புக்கொடி

25ஆம் தேதி மிக முக் கியப் பிரச்சினையாக ஈழத் தில் 90 ஆயிரம் சகோதரி கள் விதவைகளாக இருப் பதாக அய்.நா. அறிக்கை கூறியுள்ளது. இதற்கு காரணமான இனப்படு கொலையாளன் ராஜபக் சேவை போர் குற்றவாளி என்று நிறுத்தி அய்.நா. வின் மனித உரிமை ஆணையம் விசாரணை செய்வதற்கு உள்ளேயே வரக்கூடாது என்ற ராஜபக்சேவே இன்று அய்.நா.வில் பேச அழைத் ததைக் கண்டித்து டெசோ வின் தீர்மானப்படி அனை வரும் 25ஆம் தேதி வீட் டில் கறுப்புக் கொடி  ஏற்ற வேண்டும், கறுப்புச் சட்டை, கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றார் தமிழர் தலைவர்.

 

கடவுளர் பொம்மைகளுக்கு மத்தியில் கழக நூல்கள்


மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்ட இடத்தில் நவராத்திரி என்ற மூடநம்பிக்கை விழாவையொட்டி ஏராளமான பிளாட்பாரக் கடைகளில் கடவுளர் மொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொம்மைகள் விற்பனைக்கு மத்தியில் கழகப் பொதுக் கூட்டம் பொம்மைகளுக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல் இளைஞர்களின் கட்டுப்பாட்டோடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பக்தி வியாபாரத்திற்கு மத்தியிலே கழக வெளியீடுகளான கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, என பார்ப்பனர்களைத் தோலுரிக்கும் நூல்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,23.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக