ஞாயிறு, 22 ஜனவரி, 2017

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று






புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 124ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று சென்னை காமராசர் கடற்கரை சாலையில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு அருகே  வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வா.மு. சேதுராமன், முன்னாள் மேயர் கணேசன், கவிக்கொண்டல் செங்குட்டுவன், வீ. குமரேசன் மற்றும் கழகத் தோழர் - தோழியர்கள் உள்ளனர். (சென்னை - 29.4.2014).

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள் தமிழர் தலைவர் பேட்டி

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி

பாரதிதாசன் படத்திற்கு குமரி ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 29- புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

புரட்சிக்கவிஞர் பாவேந் தர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) சென்னை காமராசர் கடற் கரை சாலையிலுள்ள புரட் சிக்கவிஞர் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவி யும் மரியாதை செய்தார்.

புரட்சிக்கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தவுடன் தமிழர் தலைவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது:-

புரட்சிக் கவிஞர் அவர்க ளுடைய பிறந்த நாளான இன்று (29.4.2014) ஒரு புதுமை நாள் என்பது மட்டு மல்ல. இன்றைக்கு நாட்டை மதவெறியும், ஜாதி வெறி யும் கப்பிக்கொண்டு இருண்ட எதிர்காலம் சூழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்ற இந்தக் காலத்தில் புரட்சிக் கவிஞருடைய கருத்துக்கள் மிகவும் தேவை.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள் கையை ஒரு சூரணமாக்கி இலக்கியத்திலே தந்த பெரு மைக்குரியவர் புரட்சிக்கவி ஞர். இருட்டறையில் உள்ள தடா உலகம் என்று அன் றைக்குக் கேட்டார், அதை விரட்டுவது பகுத்தறிவே என்று சொன்னார். அப்படிப் பட்ட அந்த பகுத்தறிவை வலியுறுத்திப் பாடிய கார ணத்தால் உலகக் கவிஞராக உயர்ந்திருக்கக்கூடிய அவருக்கு உரிய விளம்பரம் தரப்படாவிட்டாலும்கூட, என்றென்றைக்கும் அவரு டைய இடத்தை எவரும் பறிக்க முடியாது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் மிகப் பெரிய சமுதாயப்புரட்சியை உருவாக்கித் தனித்த ஒரு தன் மையோடு மதவெறியை மாய்த்து மனித நேயத்தை மானுடத்தைக் காப்பாற்று வதற்காக மிகப்பெரிய அள விலே மானிடப்பரப்பையே தன்னுடைய அளவு கோலாக, தன்னுடைய நாடாக, தன் னுடைய கனவாக அமைத் துக் கொண்டவர்கள், அந்த வகையில் மானுடத்திற்கு மிகப்பெரிய மன்பதை உல கத்திற்கு அரிய கருத்துக்க ளைச் சொன்ன அந்தக் கவி ஞருடைய பிறந்த நாள் என் பது சமுதாயத்தினுடைய எழுச்சி மிகுந்த நாள். அவர் வாழ்க! அவர் புகழ் வாழ்க இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், கழகத் தலைமைச்செயற் குழு உறுப்பினர் திருமகள், வட மாவட்டங்களின் அமைப் புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண்ட லச் செயலாளர் பன்னீர்செல் வம், கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், கு.தங்கமணி, சி.வெற்றிச் செல்வி, மருத்துவர் திரா விடன் அம்பேத்கர், மரகத மணி, சண்முக லட்சுமி, ஆனந்தி, கபிலன், சுரேஷ், செங்குட்டுவன், மயிலை சாமிநாதன், நதி ஆறுமுகம், மயிலை சேதுராமன், மஞ்சு நாதன், பாரதிநகர் வெங்க டேசன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முக பிரியன், அய்ஸ்அவுஸ் மகேந் திரன், பாலு, வெற்றிவீரன், மாரியப்பன், கலைமணி மகேஷ், அசோக்குமார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், சென்னை மாநகர முன்னாள் மேயர் சா.கணே சன், கவிக்கோ, வா.மு.சேது ராமன், கவிஞர் பொன்னடி யான், கவிக்கொண்டல், மா.செங்குட்டுவன், வண்ண பூங்காவாசன், கூட்டுறவுத் துறை ஓய்வு பெற்ற அதிகாரி பி.எல்.ராஜேந்திரன் மற்றும் திரளானோர் பங்கேற்று புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை சிறப்பித்தனர்.

-விடுதலை,29.4.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக