அறிஞர் அண்ணா அவர் களின் 48 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2017) சென்னை காமராசர் கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை, பிப்.3 அறிஞர் அண்ணா அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (3.2.2017) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் அவர்களின் தலைமகனாம் அறிஞர் அண்ணா அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (3.2.2017) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினை விடத்தில் திராவிடர் கழகத் தோழர், தோழியர்கள் புடைசூழச் சென்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, கழக அமைப்பு செய லாளர் நெய்வேலி ஞானசேகரன், தொழிலாளரணி செயலாளர் செல்வராஜ், கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்தியநாரா யணன், பொதுக்குழு உறுப்பினர் தி.வே.சு. திருவள்ளுவன், வட சென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன், சென்னை மண் டல மாணவரணிச் செயலாளர் மணியம்மை, வட சென்னை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வெங்கடேசன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அயன்புரம் பொன் மாடசாமி, கொடுங்கையூர் தங்கமணி, தங்க.தனலட்சுமி, கள்ளக் குறிச்சி கழக மாவட்டத் தலைவர் மா.சுப்பராயன், மேட வாக்கம் ப.கணேசமூர்த்தி, சேத்துப்பட்டு அ.பாபு, எஸ்.பழனிச்சாமி, கோபி, திருவொற்றி யூர் கணேசன், சுமதி, பெரியார் திடல் தோழர்கள் சுரேஷ், சுகுமார், கலையரசன், கலைமணி, சுகன், மகேஷ், அசோக், பவானி, மரகத மணி, கலைமதி, அம் பேத்கர், காரை மாநகர் சுரேஷ் மற்றும் திரளான தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர்.
- விடுதலை,3.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக