தியாகராயர்நகர்-ஜெ.கருணாநிதி, மயிலாப்பூர்-மயிலை த.வேலு, சைதாப்பேட்டை-மா.சுப்ரமணியன் தி.மு.க வேட்பாளர்களுக்கு தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்து
March 22, 2021 • Viduthalai
தியாகராயர் நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி அவர்களை சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து ஆசிரியர் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு அவர்களையும், சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் அவர்களையும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து "திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்" புத்தகத்தை வழங்கி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்வதை பற்றி ஆலோசிக்கபட்டது. மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்ட துணைத் தலைவர் கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன். ந.மணித்துரை, சிவசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக