நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை

நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் மனைவியும் நடிகை ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் ஆர். சரத்குமாரின் மாமியாருமான திருமதி கீதா இராதா (வயது 80) நேற்று (21.9.2025) மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று 22.9.2025 காலை 8.30 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதையைச் செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் ராதாரவி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- விடுதலை நாளேடு, 22.09.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக