கழகம் சார்பில் செங்கல்பட்டு அருகில் வாழ்வாதாரம் இழந்தோறுக்கு நிவாரணப் பணி
கரோனா தடுப்பு அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை கூற்றோடு அருகிலுள்ள 'கோடி தண்டலம்' என்ற ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 06.05.20 முற்பகல் 11.00 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பின் மாஸ்டர் இன்ஞினியரிங்கு (Bin master Engineering) தொழிற்கூடத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள 25 கிலோ அரிசி மூட்டைகளை குடும்பம் ஒன்றுக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் 125 குடும்பங்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் வழங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் ஆயிரம்விளக்கு மு.சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பொருளாளர் எழிலரசன் மற்றும் நடராஜபுரம் வரதன் ஆகியோர் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு, 9.5.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக