அரும்பாக்கம், செப். 6- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் 03.09.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) விளக்கப் பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையிலும், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது.
துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை விளக்க உரையாற்றினார்.
இறுதியாக திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, ஒன்றிய அரசு அரசு பணிகளில் ஏற்படுத்தும் குளறுபடிகளை விளக்கிக் கூறியும், ‘புதிய கல்வி திட்டம்’ என்ற பெயராலே தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காமல் துரோகம் விளைவிக்க நினைக்கும் நிலையை எடுத்துக் கூறியும், ‘புதிய கல்விக் கொள்கையால் கல்வி வளர்ச்சியை 50 விழுக்காடாக உயர்த்துவோம்’ என்று ஒன்றிய பிஜேபி அரசு கூறுகிறது, ஆனால் திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாடு அரசு, எப்பொழுதோ அய்ம்பது விழுக்காட்டை எட்டி விட்டது. இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியும் மக்களிடம் பரவிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை விளக்கியும், கொட்டும் மழையிலும் சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார்.
முன்னதாக ‘அறிவுமானன்’ கொள்கை முழக்க பாடல்களை பாடினார்.
கூட்டத்தின் முடிவில் அரும்பாக்கம் த.இராஜா நன்றி கூறினார்.
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் சு.அன்புச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், வை.கலையரசன், க.கலைமணி, வடசென்னை மாவட்ட கொடுங்கையூர் பகுதி பொறுப்பாளர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், வடசென்னை க.செல்லப்பன், க.துரை, மு.வேலவன், மு.செல்வி(ஆவடி மாவட்டம், மகளிர் அணி), க.ச.பெரியார் மாணாக்கன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம், அயன்புரம் சு.துரைராசு, ச.இராசசேகரன், செல்வம், அ.ராஜசேகரன், சஞ்சய் மற்றும் பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக