செவ்வாய், 10 செப்டம்பர், 2024

பள்ளிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்த ஆசாமிமீது உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!

 

விடுதலை நாளேடு

சென்னை: பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

சென்னை, செப்.10 ‘பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, பகுத்தறிவும் மாணவர்களும் எனும் தலைப்பில் நேற்று (9.9.2024) மாலை 6.30 மணிக்கு, சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஜீவானந்தா சாலையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரு.அண்ணாமலையின் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா. தீபக், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ,அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வில் இணைப்புரை வழங்கி நெறிப்படுத்தினார். துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, தலைமை நிலைய அமைப்பாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி. செங்குட்டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன்,வழக்குரைஞர் துரை அருண், ந.மணிதுரை, பெரியார் யுவராஜ், வி.வளர்மதி, மு.பவானி, வி.தங்கமணி, ச.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். முன்னதாக அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் ஆசிரியருக்கு அணியணியாய மேடையேறி ஆடையணிவித்து மரியாதை செய்தனர். அவர் தனது உரையில், குறுகிய அவகாசத்தில் கூட்டம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்காக தலைமை ஏற்றிருந்த கரு.அண்ணாமலை, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என்று வாழ்த்தினார்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டையும் முறையே சுகாதரத்துறை, மருத்துவத் துறை ஆகியவற்றுடன் சுவையான பொருள் படும்படியாக உவமித்தார். அதாவது மூடநம்பிக்கை நோய் வருவதற்கு முன் எச்சரிப்பது திராவிடர் கழகத்தின் பணி.

அந்தப்பணி பிரச்சாரத்தின் வாயிலாக நடைபெறும். அதையும் மீறி மூடநம்பிக்கை நோய் வந்துவிட்டால் மருத்துவத்துறையாக இருக்கின்ற தி.மு.க. அரசு அதற்கு மருத்துவம் செய்யும் என்று அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சாளர் பேசியதையும், அதன் எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார். உடனடியாக நடவடிக்கை எடுத்தற்காக தமிழ்நாடு அரசை ஆயிரம் முறை பாராட்டலாம் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார். அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகம் கடந்த மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் 100 மூடநம்பிக்கை ஒழிப்புக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளதையும், தான் நெல்லை வீரவநல்லூரில் கலந்துகொண்டு பேசியதையும் சுட்டிக்காட்டிவிட்டு, 1996 இல் பிள்ளையார் பால் குடித்த புரளி பரவியதற்காக அண்ணா சாலையில் தன்னுடைய கழுத்தில் தமுக்கு கட்டிக்கொண்டு தமுக்கடித்து, பிள்ளையார் பொம்மையை பால் குடிக்க வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்ததையும், இதுவரை எவரும் முன்வரவில்லை என்பதையும் கூறி, திராவிடர் கழகம் மூடநம்பிக்கை ஒழிப்புப் போரில் எவ்வளவு முனைப்பாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து 51 ஏ(எச்) சட்டப்பிரிவை இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகத்தை படித்துக்காட்டி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்பதை எடுத்துரைத்தார். இதன் மூலம் அந்த மூடநம்பிக்கைப் பேச்சாளர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பேசியுள்ளதை புரிய வைத்தார். மேலும் அவர், ஆத்மா – ஆன்மிகம் – முன் ஜென்மம், மறு ஜென்மம் ஆகியவற்றின் பித்தலாட்டங்களை தந்தை பெரியார் கருத்துகளைச் சொல்லி, மக்கள் இதுபோன்ற கருத்துகளை மற்றவர்களுக்கும் பரப்பி தங்களது கடமைகளைச் செய்யவேண்டும் என்று கேட்டு நிறைவு செய்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வருகை
நிகழ்ச்சியின் இடையே, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வருகை தந்தார். ஆசிரியர் தனது உரையை நிறுத்திவிட்டு அவரை எழுந்து நின்று வரவேற்று பிறகு தொடர்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த கரு. அண்ணாமலை தங்கள் குடும்பத்துடன் ஆசிரியருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் கரிகால்வளவன் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தொடக்கத்தில் 'கோபி' கலைக்குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மு.சண்முகப்ரியன், வழக்குரைஞர் சோ.சுரேஷ், பொறியாளர் த.கு.திவாகரன், மாவட்டக் கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், காஞ்சிபுரம் முரளி, சேத்துப்பட்டு நாகராஜ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தளபதிராஜ், பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம், திமுக பகுதி செயலாளர் கே.கண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் உதுரைராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் வாசுகி பாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.தங்கராசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச்செயலாளர் கரிகால்வளவன், சின்மயா நகர் லோகு, திமுக வட்டச் செயலாளர் செழியன், பூக்கடை பழனிச்சாமி, கதிரேசன், நிசா, கனிமொழி, சென்னை அரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தோழர்கள் க.சுப்பிரமணி, செயசீலன், வீ.பொற்கோவன், குமணன், ஓவியர் மதிவாணன், பெரியார்மணிமொழியன், கண்ணன், மூவேந்தன், மாசிலாவிநாயகமூர்த்தி, மணி பாரதி, வழக்குரைஞர்கள் சுரேசு, அன்பரசன், கார்த்திக் திருநாவுக்கரசு மற்றும் டைல்ஸ் குமார், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் உ.துரைராஜ், தி.மு.க. பகுதிச் செயலாளர் கே.கண்ணன், தி.மு.க. வட்டச் செயலாளர் செழியன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கார்த்திகேயன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி .பவானி, வி.அஜந்தா (மகளிர் அணி செயலாளர்), மா. சண்முகலட்சுமி, இரா.ரவி, ஈ.குமார், சூளைமேடு நல். இராமச்சந்திரன், சைதை தென்றல், சரவண ராஜேந்திரன், தரமணி ம. ராஜி விசிறிசாமியார்,அறிவுமானன்,மு.சேகர், விடுதலை நகர் ஜெயராமன், பழவந்தாங்கல் தமிழினியன், க. வெற்றி வீரன், கூடுவாஞ்சேரி ம.ராசு, சென்ன கிருஷ்ணன், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் இலட்சுமிபதி, சன் சரவணன், சி.சிவாஜி, தாம்பரம் குணசேகரன், படப்பை சந்திரசேகரன், பா.கோபாலகிருஷ்ணன், மு. திருமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், ஆவடி தமிழ்மணி, அன்பரசன், தனசேகர், கமல், ஹரி, சந்தோஷ், ஷோபனா, வித்யா, லோகேஷ், செ.பெ. தொண்டறம் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்), மு.செல்வி, மு.பாலமுரளி, இளவரசன், மணிமாறன், முகப்பேர் முரளி, சுந்தர்ராஜன், இரணியன், சாலமன், சஞ்சய், நெற்குன்றம் நாகராஜ்.வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், கொடுங்கையூர் பகுதிபொறுப்பாளர் கோ.தங்கமணி,தங்க.தனலட்சுமி, ௧. வெற்றிச்செல்வி, துரை இராவணன், அயன்புரம் துரைராஜ், வேலவன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிறைவாக விருகை செல்வம் நன்றி கூறினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக