மயிலை, செப். 1- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் 27.8.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) விளக்கப் பொதுக்கூட்டம்” தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமையிலும், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, இளைஞர் அணி துணைச் செயலாளர் மந்தைவெளி இரா. மாரிமுத்து, மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி. தங்கமணி மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவர் வி. வளர்மதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ் தொடக்க உரையாற்றியதற்குப் பின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன் மற்றும் மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா. மணியம்மை ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
இறுதியாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மக்களிடம் மூடநம்பிக்கை மண்டிக் கிடப்பதையும், அதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும், இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, சட்டவிரோதமாக மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டித்தும், மதச்சார்பின்மைக்கு எதிராக அரசே! மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விளக்கியும், கண்டித்தும், தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியை விளக்கிக் கூறியும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கழகம் ஆற்றும் பணிகளைக் குறித்து விளக்கிக் கூறியும்’ சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக