சுயமரியாதை இளைஞர் மன்றம். சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கப் பொதுக் கூட்டம்
மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம் 31-5-1936 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு காஞ்சி தோழர் சி.என்.அண்ணா துரை எம்.ஏ. தலைமையின் கீழ்கூடி அடியிற்கண்ட தீர்மானங்களை நிறை வேற்றினர்.
இதுவரையில், சுயமரியாதை இரவுப் பாடசாலை என்ற பெயருடன் தோழர் ஆ.அ.கபாலமூர்த்தி நடத்திவரும் பாடசாலையை இவ்வாண்டு முதல் சுயமரியாதைச் சங்கத்துடன் இணைப்ப தெனவும்,
நமது சங்கத்தின் சார்பாக, 2 அல்லது 3 பிரச்சாரகர்களைத் தயார் செய்து சென்னையிலுள்ள, சுயமரியாதை சங்க மல்லாத மற்றைய சங்கங்களிடம், நேச பாவமான வாதாடுதலை ஏற்பாடு செய் தல்.
ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சுயமரியாதைச் சங்க இரவுப் பாடசாலையின் ஆண்டு விழா நடத்த வும் தீர்மானிக்கப்பட்டது,
– ‘விடுதலை’
– 3.6.1936
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக