*  ‘லவ் ஜிகாத்என்ற பெயராலே ஜாதிமத மறுப்புத் திருமணங்களைத் தடுக்காதே!

* கல்விவேலை வாய்ப்பில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தேவை!

உலக மகளிர் நாளில் திராவிடர் கழக மகளிரணிமகளிர்ப் பாசறை ஆர்ப்பாட்டம்!

சென்னைமார்ச் 8- காவல்துறையில் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரியேகாவல்துறைப் பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்டும்சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணியிடை நீக்கம்கூட செய்யாததைக் கண்டித்தும்உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியேபாலியல் குற்றம் செய்த ஆசாமியிடம்பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டதைக் கண்டித்தும்கல்விவேலை வாய்ப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும்திராவிடர் மகளிரணிமகளிர்ப் பாசறை சார்பில் இன்று (8.3.2021) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

உலக மகளிர் உரிமை நாளான இன்று (8.3.2021) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறையின் சார்பில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி தலைமையில் மகளிர் உரிமைக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகளிர் அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு மகளிருக்குத் தேவை!

அர்ச்சகர் உரிமை பெண்களுக்கும் தேவை

பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடுக!

பள்ளிகளில் பெண்களுக்கு கராத்தே - சிலம்பம் கற்றுக் கொடு!

ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தடுக்காதே!

காவல்துறை அதிகாரிக்கும் பாலியல் தொந்தரவாவெட்கம்வெட்கம்!

காவல்துறையேநீதிமன்றமேபாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முனையாதே!

போன்ற ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்றார்மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்செல்வி தொடக்கஉரையாற்றினார்புதிய குரல் பரிமளாவழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் .வீரமர்த்தினி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் .அருள் மொழி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

பாலியல் வன்முறைக் குற்ற வழக்கில் குற்றமிழைத்த வரையே மணம்புரிந்து கொள்ளச் சொல்லும் உச்சநீதி மன்றத்தின் நீதிபதி கருத்தை கழக மகளிரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பெண்களை அடிமைப்படுத்துகின்ற மனுதர்மத்தை நீதி மன்றங்களில் குறிப்பிடக் கூடாது.

பாலியல் குற்றமிழைத்த காவல்துறை உயர் அதிகாரி ராஜேஷ்தாஸ்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

காவல்துறை பெண் எஸ்.பி.யிடம் பாலியல் குற்றமிழைத்த காவல்துறை உயர் அதிகாரிமீதான விசாரணையை மாநில காவல்துறை விசாரணையிலிருந்து சிபிஅய் அல்லது வேறு அமைப்புக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற் றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்பொரு ளாளர் வீ.குமரேசன்மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட பொறுபபாளர்கள் கலந்துகொண்டனர்.

பங்கேற்றோர்

சி.வெற்றிசெல்விவி.வளர்மதிபி.அஜந்தாவி.யாழ்ஒளிபெரியார் களம் இறைவி.சுமதி.மரகதமணிகோட்டீசுவரிஜி.பாக்கியவதிமு.ராணிபூவிருந்தவல்லி லலிதாசுந்தரி.வெண்ணிலாமு.பவானிமோ.விஜயாவி.தென்னரசிஇளையராணிசி.அமலிஅனுஷாசுமதிமீனாம்மாள் மற்றும் மகளிரணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பெருந் திரளாக பங்கேற்றனர்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்செயலாளர் தி..கணேசன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ரபார்த்தசாரதிஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசுதிருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன்செயலாளர் பாலுசோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன்தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன்சு.மோகன்ராஜ்மா.குணசேகரன்கோ.வீ.ராகவன்அரும்பாக்கம் சா.தாமோதரன்,  வெ.ஞானசேகரன்சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ்உடுமலை வடிவேல்முத்தழகுமு.ரகுபதிமுருகேசன்இரணியன்டில்லிபாபுதமிழ்செல்வன்பெரம்பூர் கோபாலகிருஷ்ணன்எருக்கமாநகர் ரவிக்குமார்கெடார் மும்மூர்த்திகொடுங்கையூர் .துரைகு.ஜீவரத்தினம்ஆயிரம் விளக்கு சேகர்பூவிருந்தவல்லி தமிழ்செல்வன்,திருவண்ணாமலை கவுதமன்கூடுவாஞ்சேரி மா.ராசுஜனார்த்தனன்ஆவடி கலைமணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.