அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வை.பாலசுந்தரம் (வயது 76) உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில நாள் களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (6.12.2019) மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
சட்டமன்ற திமுக உறுப்பினராகவும், சென்னையின் மேயராகவும் பதவி வகித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது மனைவி பவானி, மகள் அனுப்பிரியா மற்றும் குடும்பத்தாருக்கும், அவர் இயக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
7.12.2019
குறிப்பு: தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் மறைவுற்ற வை.பா. உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக