புதன், 6 ஜனவரி, 2021

திராவிடம் வெல்லும்: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியின்மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம்; தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம்!


தந்தை பெரியார் நினைவு நாளில் தமிழர் தலைவரின் சூளுரை

‘திராவிடம் வெல்லும்' என்பதை கல்லில் செதுக்க, உறுதியேற்போம்;  உழைத்து ஈட்டும் வெற்றியை தி.மு.க.வின்மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம்; தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம்!  ஒரே இலக்கு - திராவிடம் வெல்லும் -பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒப்பாரும் மிக்காருமிலா நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உடலால் நம்மை விட்டுப் பிரிந்து 47 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன!

‘மானமிகு' பட்டம் கொடுக்கும் பகுத்தறிவுப் பல்கலைக் கழகம்

அவர் புதைக்கப்பட்டவராக இல்லாத தத்துவத் தலைவரானதால், விதைக்கப்பட்ட வித்தகராகி, வீரியத்துடன் அவ்விதை முன்னிலும் வேகமான வளர்ச்சியைக் காணுகிறோம். உலகத்திற்கே ஒளியூட்டி வழிகாட்டும் லட்சியச் சுடரை பலதரப்பட்டவர்களும், பற்பல நாடுகளிலும் ஏந்திக்கொண்டு, தங்களது லட்சியப் பயணத்திற்குத் துணையாய்க் கொள்கின்ற நிலை - பெரியார் என்பது அறிவுப் புரட்சி, சுயமரியாதைப் பாடம் சொல்லி ‘மானமிகு' பட்டம் கொடுக்கும் ஒரு பகுத்தறிவுப் பல்கலைக் கழகம் என்பதை உலகம் கண்டு வியந்து வருகிறது!

எப்படியாவது அந்த ஆலமரத்தை சாய்த்திட காவிகளின் புழுதிப் புயல், சில அரசியல் அடிமைகளின் முதுகில் சவாரி செய்கிறது; மூச்சைப் பறிக்க முனைந்து, மூக்குடைப்பட்டு, வருகிறது - பல வாடகைக் குதிரைகளை சவாரிக்கு அழைத்து களத்தில் நிற்க கச்சை கட்டுகின்றது.

மின்மினிப் பூச்சுகளை வைத்து மின்சாரத்தை தோற்கடிக்க எண்ணும் பேதமை

எத்தனையோ சுனாமிகளைக் கண்டு, அசையாமல் நிற்கும் இந்த லட்சியத்தின் ஆணிவேர்பற்றி அறியாத அரசியல் ஆணவக்காரர்களது திட்டம் - மின்மினிப் பூச்சுகளை வைத்து மின்சாரத்தைத் தோற்கடிக்க எண்ணும் பேதமை என்பதை உலகுக்குக் காட்ட உன்னதமான ஓர் அரிய வாய்ப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 மூலம் வருகிறது.

வரலாறு திரும்பும் என்று காட்டுவோம்!

வரலாறு திரும்பும் - 1971 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெரிய பெரிய தலைவர்களின் கூடா நட்பும், பார்ப்பனர்களின் இடையறாத விஷமப் பிரச்சாரமும் பலமான புயல்போல் வீசிய நேரத்தில்கூட, திராவிடம் பெருஉரு (விஸ்வரூபம்) கொண்டு எழுந்து, முன்பு எப்போதும் தி.மு.க. அணிக்குத் தராத வெற்றியைத் தந்த அந்த வரலாறு திரும்பும் என்று காட்டுவோம்!

திராவிடம் வெல்லும் -

பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்!

‘திராவிடம் வெல்லும்' என்பதை கல்லில் செதுக்க, உறுதியேற்போம்;  உழைத்து ஈட்டும் வெற்றியை தி.மு.க.வின்மூலம் மதவெறி மண்ணல்ல திராவிடம்; தமிழகம் சமூகநீதியின் வற்றாத ஊற்று, வறளாத ஜீவநதி என்பதை உலகறிய உறுதியேற்போம்!

ஒரே இலக்கு - திராவிடம் வெல்லும் -

பெரியார் தத்துவம் அதைச் சொல்லும்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

24.12.2020

திங்கள், 4 ஜனவரி, 2021

திராவிட மாணவர் கழக மண்டல புதிய பொறுப்பாளர்கள்

 திராவிட மாணவர் கழக மண்டல புதிய பொறுப்பாளர்கள் 

மண்டலம் பெயர் 
சென்னை வ.வேலவன் 
காஞ்சிபுரம் மோ.பகுத்தறிவாளன் வேலூர் க.வெங்கடேசன் 
தருமபுரி மா.செல்லதுரை 
கடலூர் ஆர்.பி.பண்பாளன் விழுப்புரம் த.பகவான்தாஸ் 
சேலம் இதமிழர் தலைவர் 
ஈரோடு தா.சிவபாரதி 
கோவை மு.ராகுல் 
திருச்சி க .சசிகாந்த் 
அரியலூர் செ.வெற்றிசெல்வன் தஞ்சை ச.சற்குணம் 
திருவாரூர் அ.ஜெ.உமாநாத் புதுக்கோட்டை இரா.குமார் சிவகங்கை அ.பிரவின் முத்துவேல் திண்டுக்கல் வி.சு.பெரியார் மணி மதுரை சு.சித்தார்த் 
நெல்லை அ.வ.சவுந்தரபாண்டியன் 

திராவிட மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் 
தஞ்சாவூர் 
தலைவர் இரா .கபிலன் 
செயலாளர் ஜெ.மானவீரன் அமைப்பாளர் ரா.மகேந்திரன் 

திருச்சி 
தலைவர் ந.கண்ணன் 
செயலாளர் ஆ . அறிவுசுடர் 
அமைப்பாளர் க.அயாழினி 

பட்டுக்கோட்டை 
தலைவர் சு.ரஞ்சித்குமார் அமைப்பாளர் கே.நாடிமுத்து க.ரூபன் 

திருவாரூர் 
தலைவர் எம் . கோபிநாத் 
செயலாளர் ஏ . அருண்பிரபாகரன் அமைப்பாளர் மு.க.ஹரிணி 

தலைமை நிலையம் , 
திராவிடர் கழகம்

சனி, 26 டிசம்பர், 2020

தென்சென்னை மாவட்ட தி.-க. தலைவர் எம்.பி.பாலு _ வள்ளியம்மாள் ஆகியோரின் மகன் திருமண வரவேற்பு

திங்கள், 21 டிசம்பர், 2020

சீரிய பொதுத் தொண்டர் மானமிகு சக்திதாசன் மறைவிற்கு வீரவணக்கம்!


தமிழகக் குடியரசு கட்சியின் சீரிய தலைவரும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை களிடத்தில் அழுத்தமான பற்று கொண்டவரும், புத்த மார்க்கத்தை வாழ்வியலாகக் கொண்டவரும் ‘சொல்லின் செல்வர்' என்ற அடைமொழிக்குச் சொந்தக் காரரும், மக்கள் பிரச்சினையில் முன்னின்று போராடக் கூடியவருமான மானமிகு சக்திதாசன் (வயது 92) மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவரின் அளப்பரும் பொதுத் தொண்டுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆறு தலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.12.2020

கழகத் துணைத் தலைவர் மரியாதை

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சக்திதாசன் இல்லத்திற்கு இன்று (11.12.2020) காலை சென்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மறைவுற்ற சக்திதாசன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் உடனிருந்தனர்.

தமிழ் தேசியம் என்கிற பெயரில் பித்தலாட்டப் பேர்வழிகளின் முகத் திரையை கிழித்தெறியும் "மயக்க பிஸ்கெட்டுகள்-ஒர் எச்சரிக்கை"


 


புத்தகங்களை மயிலை பகுதியில் தென் சென்னை மாவட்ட மாணவர் கழகத் தோழியர்கள் வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, மா.சுவாதி, பா.தீட்சா, பா.தீப்தி  ஆகியோர் வீடு வீடாகச் சென்று புத்தகம் வழங்கினார்கள்.

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், பொறியாளர் ஈ.குமார், மு.சண்முகபிரியன், மாணவர் கழக அமைப்பாளர் வி. விஸ்வாஸ் ஆகியோர் மயிலாப்பூர் பஜார் வீதியில் உள்ள கடைகளில் வழங்கினர்.

கழகத் தோழர்களுக்குப் பாராட்டு!


பிறந்த நாள் விழா காணும் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சட்டக் கல்லூரி தேர்வில் வெற்றி பெற்று, அடுத்து எம்.எல். படிக்கப் போகும் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ. மதிவதனிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சால்வையும் அணிவித்தார் கழகத் தலைவர்.

ஒரு கால கட்டத்தில் மகளிர் வழக்குரைஞர் என்றால் நமது பிரச்சார செயலாளர் அருள்மொழியைத்தான் தெரியும். இப்பொழுது மணியம்மை, மதிவதனி, அருள்மொழி தளபதி என்று ஒரு பட்டியல் வளர்ந்து கொண்டு போவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் கழகத் தலைவர்.

(தலைமைச் செயற்குழு கூட்டத்தில், 12.12.2020)

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மயக்க பிஸ்கட்டுகள் ஓர் எச்சரிக்கை புத்தகம் விநியோகம்



தென்சென்னை, டிச. 15- தென் சென்னை மாவட்ட இளை ஞரணி சார்பில் மயக்க பிஸ் கட் ஓர் எச்சரிக்கை புத்தகம் தென்சென்னை மாவட்டம் கோட்டூர்புரத்தில் உள்ள என்.எஸ் கிருஷ்ணன் சிலை அருகில்  தொடங்கி அண்ணா நூலகம் வரை கோட்டூர் மார்க்கெட் வழியாக சென்று பொதுமக்கள் மற்றும் வணி கர்கள் அனைத்துக் கட்சித் தோழர்கள் அனைவரிடமும்  வழங்கப்பட்டது. இந்நிகழ் விற்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வில்வநாதன் தலைமை ஏற்றார்.

மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, சென்னை மண் டல இளைஞரணி பொறுப் பாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை,  மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ந.சிவ சீலன்,  இளைஞரணி தோழர்   சண்முகப் பிரியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாய்க் கழகம் திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று திராவிட முன்னேற்ற கழகத் தின் கோட்டூர் பகுதி 172 ஆவது வட்ட செயலாளர் ராஜ்குமார்,  சென்னை கோட் டூர்புரம் 172 ஆவது வட்ட செயலாளர் க.மணி,  மறு மலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் 172ஆவது கோட்டூர் பகுதி வட்டச் செயலாளர் டோமினிக்,  பெரியாரிய உணர்வாளர் இளங்கோ, பெரியாரிய உணர் வாளர் செந்தில் ஆறுமுகம் பெரியார் பெருந்தொண்டர் ராசு, மதிமுகவின் 172ஆவது வட்ட துணைச் செயலாளர் வைகோ ரமேஷ், மதிமுகவின் பொறுப்பாளர் ஜெயவேல், திமுகவின் இளைஞர் அணித் தோழர்கள் பாலாஜி, சரவ ணன்  ஆகியோர் கலந்து கொண் டனர்.

இந்நிகழ்வினை தென் சென்னை மாவட்ட இளை ஞர் அணி பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.