அய்யாவின் அடிச்சுவட்டில்...
கி.வீரமணி
தென்சென்னை மாவட்ட தி.-க. தலைவர் எம்.பி.பாலு _ வள்ளியம்மாள் ஆகியோரின் செல்வன் பி.அருள் அவர்களுக்கும், சைதை வினாயகம்_பத்மாவதி ஆகியோரின் செல்வி உமா அவர்களுக்கும் 24.6.1991 அன்று இரவு 7 மணிக்கு சைதை கொத்தவால்சாவடி பி.எஸ்.டி. திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
தென் சென்னை மாவட்ட தி.க.தலைவர் எம்.பி.பாலு இல்லத் திருமண வரவேற்பில் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையார்
இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நிலையில், அமெரிக்காவிலிருந்து என் சார்பாகவும் என்னுடைய துணைவியார் சார்பாகவும் அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக் கடிதத்தை எழுதினேன். நான் அமெரிக்காவிலே இருந்தபொழுது அங்கு எனக்கு வந்த ‘விடுதலை’யை படித்தேன். அதில், நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை மணமேடையில் படித்தார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். தந்தை பெரியாரின் கொள்கைப் பிடிப்பு நம்மை எங்கிருந்தாலும் இணைக்கும் என்று குறிப்பிட்டேன்.
கே.கே.சி.எழிலரசன் - எஸ்.ஆர்.அகிலா ஆகியோருக்கு வாழ்க்கை ஒப்பந்தம் செய்து வைக்கிறார் ஆசிரியர்
10.7.1991 அன்று திருப்பத்தூரில் வடஆர்க்காடு அம்பேத்கர் மாவட்ட தி.க. செயலாளர் கே.கே.சின்னராசு_ கமலா ஆகியோரின் செல்வன் கே.சி.எழிலரசனுக்கும், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்_காந்திமதி ஆகியோரின் செல்வி எஸ்.ஆர்.அகிலாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்திவைத்து வாழ்த்துரை ஆற்றினேன்.
- உண்மை இதழ் 11-16 .12 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக