
மயிலை, ஜூன் 12- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், 06.06.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை (லூப் சாலையில், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம் பேச்சாளர் கோகுல் என்கிற குயிலன் ஆகியோர் உரையாற்றினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மயிலாப்பூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இறுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை ஆற்றினார். எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125ஆவது வட்டச் செயலாளர், தி.மு.க.), மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக அறிவுமானனின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் நிகழ்ச்சி விளம்பரப்படுத்தப்பட்டது.
இரா.பிரபாகரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அ.அன்பு (இளைஞர் அணி துணைத் தலைவர்கள்), இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) வி.வளர்மதி (மகளிர் அணித் தலைவர்), பி.அஜந்தா, மு.பவானி (மகளிர் பாசறைத் தலைவர்), ஜெ.சொப்பன சுந்தரி, செய.குசேலன், வி.தங்கமணி, சா. தாமோதரன், வை. கலையரசன், மு. பசும்பொன், செ.பெ.தொண்டறம், சு.தமிழினி தானு, ஜெயசங்கரி, ஆர் ராதா, கு ரதியா, பார்வதி, எஸ்.வசந்தி, விஜயா, ஜி.ரேவதி, கவிதா, இனியன் சம்பத், மயிலை தா.தீபன்,ம.தி. பெரியார் இனியன், ம.தி. பெரியார் ஆதவன், சி. மதியழகன், அய். முனுசாமி, எம். ஜெய்கர், க. சதீஷ்,ஆர். கிருஷ்ணவேணி, சு. பரமசிவன், வே. நடராஜன், ஆர். அழகேந்திரன், நாராயணசாமி, நந்தகுமார், சி. சுப்பிரமணி, ஆர். கோவிந்தசாமி, வெங்கடேசன்,மோ.திருமலை மற்றும் கலந்து கொண்டனர்.
-விடுதலை நாளேடு, 12.06.2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக