மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், புரசை சு.அன்புச்செல்வன், கி.தளபதிராஜ் மற்றும் தோழர்கள் உள்ளனர். * திருமதி ராசாத்தி கருணாநிதி அவர்களை தமிழர் தலைவர் உடல்நலம் விசாரித்தார். (7.8.2024)
பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசுிரியர் கி. வீரமணி மற்றும் பொறுப்பாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பங்கேற்ற தோழர்கள்.
மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பணித் தோழர்கள் , திண்டிவனம் சிறீராமுலு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். (சென்னை பெரியார் திடல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக