சென்னை, ஆக.1- தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திரா விடர் கழகம் சார்பில் நேற்று (31.7.2024) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.
இந்திய ஒன்றிய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள ஓரவஞ்சனையை கண்டிக்கின்ற, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டுகின்ற வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பிஜேபி ஆட்சிக்கு உட்படாத மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றிய அரசு தனிப்பெரும்பான்மை ஆட்சி அல்ல. பீகார், ஆந்திரா கொடுத்த ஆதரவில் நடைபெறுகின்ற என்.டி.ஏஆட்சி. தேர்தலுக்கு முன் 400 இடங்கள் என்று வீராப்புடன் பேசினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பிஜேபி என்ன செய்தது? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே, கொடுத்தார்களா? ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரும் என்று சொன்னதுபற்றிகேட்டால், ஜூம்லா என்கிறார்கள். அதற்குத்தான் பிஜேபிக்கு நாட்டுமக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு-புதுச்சேரியில் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்றது. பட்ஜெட்டைப் பார்க்கும்போது, இவர்களுக்கு பட்டபின்பும் புத்தி வரவில்லை என்பது தெரிகிறது.
இவர்களுக்கு ஆதரவான மாநிலங்களுக்கு அதிக நிதி அளிப்பதும், ஆதரவில்லாத மாநிலங்களுக்கு நிதியை கொடுக்காமலும் இருக் கிறார்கள். இதிலே பாதிக் கப்பட்ட மாநிலங்களில் முதன் மையானது தமிழ்நாடுதான். பட்ஜெட்டில் தமிழ், தமிழ் நாடு எனக் கூறவில்லை. அதற்குமுன்பும் இவர்கள் தமிழ், தமிழ்நாடு என்று கூறி வந்ததும் ஏமாற்று வேலைதான். நிதிநிலை அறிக்கை என்றால், இந்தியா கூட்டாட்சியில் அத் துணை மாநிலங்களும் சம கண்ணோட்டத்துடன் பார்க் கப்பட வேண்டும் என்பது தான். கூட்டாட்சித் தத்துவம்.
கண்டிக்க வேண்டியதை கண்டிப்போம், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறோம்.
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, வஞ்சிக்கப்படும் விவசாயம் என்பது குறித்து பெரிய அளவில் பயணம் செய்து மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளோம்.
இந்த பட்ஜெட்டில் 2ஆவது மெட்ரோ ரயில் திட்டம்குறித்து குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. அவர்கள் முன்பு கூறியபடி, கோவை, மதுரை, சென்னை மெட்ரோ ரயில் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. இப்படி ஒதுக்குவதன்மூலம் பிரிவினைக்கு தள்ளுவது பிஜேபி அரசு.
கேரளாவில் பேரிடர் உயிரிழப் புகளுக்கு நம்முடைய இரங்கலை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டதை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய அதிகாரிகள், வந்து பார்த்தனர். ஆனால், நிவாரண நிதி தமிழ்நாடு அரசு கேட்டதைக் கொடுக்கவில்லை. பீகாருக்கு 58ஆயிரம் கோடி, உ.பி.யில் ஒரு ரூபாய் ஜி.எஸ்.டி.க்கு இரண்டு ரூபாய் கொடுக்கிறார்கள். தமிழ் நாட்டுக்கு 29 காசுகள்தான் என்றால், நேர்மையான ஆட்சி என்பதை நம்ப வேண்டுமா?
நீட் தேர்வை எதிர்த்து நாம்தான் போராட்டத்தைத் தொடங்கினோம். இன்று பல்வேறு மாநிலங்களில் நீட்டை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிஜேபி ஆளும் மாநிலத்திலும் எதிர்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் எல்லைகளைக் கடந்து தந்தை பெரியாரின் குரல் ஒலிக்கிறது. பிஜேபி தவிர பட்ஜெட்டை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்க் கின்றன.
தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?
இந்த வெகுஜன விரோத ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கின்றனர். மக்களின் குரல் மகத்தான குரல். மக்கள் மன்றம்தான் ஆட்சியை வழி நடத்துகிறது.
சமூக நீதியில் 42 மாநாடுகளை கழகம் நடத்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், பஞ்சாப் குர்தாஸ்பூர், கேரளா, டில்லி என களம் கண்டுள்ளோம்.
டில்லியில் பிரதமர் இந்திரா காந்தி இல்லம்முன் மறியல் செய்து திகார் சிறைக்கும் சென்றோம். இறுதியில் வெற்றி பெற்றோம்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் திடீரென பொருளாதார அடிப்படையை, இடஒதுக்கீட்டில் வருமான உச்ச வரம்பை கொண்டு வந்தார். போராடினோம் வெற்றி பெற்றோம்.
அரசமைப்புச்சட்டத்தில் பொருளா தார அடிப்படை கூடாது என்று 285 பேர் வாக்களித்து தோல்வியுறச் செய்தனர். 5 பேர்தான் அதற்கு அப்போது ஆதரவு.
இதே மோடி குஜராத் முதலமைச் சராக இருந்தபோது, நீட், ஜி.எஸ்.டி.யை எதிர்த்தவர்தான். இப்போது பிரதமரானதும் திணிக்கிறார்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் மட்டும்தான் நிறைவேறியது.
இறுதி வெற்றி பெறும்வரை போராட்டங்கள் ஓயாது. நாமும் ஓயப் போவதில்லை
-இவ்வாறு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
திராவிடர் கழக கிராமப்பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
தென்சென்னை மாவட்டச் செய லாளர் செ.ர.பார்த்தசாரதி நன்றி கூறினார்.
கழக துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
பங்கேற்றோர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, சி.வெற்றிச் செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஆ.வெங்கடேசன், இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் சோ.சுரேஷ், யாழ்திலீபன், தலைமைக்கழக அமைப்பாளர் அரக்கோணம் பு.எல்லப்பன், மாநில ப.க. அமைப்பாளர் காஞ்சி பா.கதிரவன், மாவட்ட தலைவர் அ.வெ. முரளி, செயலாளர் கி. இளையவேல், குறளரசு, எழிலரசி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், போளூர் பன்னீர்செல்வம், ச.ராஜசேகரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், வழக்குரைஞர் ந.விவேகானந்தன், ஊரப்பாக்கம் இராமண்ணா, பெரியார் மாணாக்கன், இ.தமிழ்மணி, தென்மாறன், விருகம்பாக்கம் கோட்டீஸ்வரி, திருவாரூர் நர்மதா, பூவை.செல்வி, தங்க.தனலட்சுமி, பசும்பொன், வி.வளர்மதி, அஜந்தா, க.வெண்ணிலா, மு.பவானி, த. மரகதமணி, சொப்பன சுந்தரி, மெர்சி, பகுத்தறிவு மற்றும் தென்சென்னை, வடசென்னை, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
தென் சென்னை: கோ.வீ. இராகவன் (துணைச் செயலாளர்), அரும்பாக்கம் சா. தாமோதரன் (துணைச் செயலாளர்), மு. சண்முகப்பிரியன், மணித்துரை, எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை, பி.டி.சி. இராசேந்திரன், மதிவாணன் (சிந்தாதிரிப்பேட்டை), ச. மாரியப்பன் (கோடப்பாக்கம்), உதயா (அய்ஸ் அவுஸ்), சூளைமேடு இராமச்சந்திரன்.
வடசென்னை: கி. இராமலிங்கம் (காப்பாளர்), சி. பாஸ்கர் (அமைப்பாளர்), கோ. தங்கமணி (கொடுங்கையூர் கழக தலைவர்), அயன்புரம் துரைராசு, கண்மணி துரை (கண்ணதாசன் நகர்), க. செல்லப்பன் (வாசகர் வட்டம்), ச. இராசேந்திரன் (பூம்புகார் நகர்).
தாம்பரம் மாவட்டம்: இராமாபுரம் ஜெ. ஜனார்த்தனம், இராமாபுரம் சுப்பிரமணி, சந்திரசேகர், தனசேகர்.
சோழிங்கநல்லூர் மாவட்டம்: பி.சி. ஜெயராமன், (மாவட்ட ப.க. அமைப்பாளர்).
செங்கல்பட்டு மாவட்டம்: மதுராந்தகம் நகர தலைவர் ஏ. செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் செ. கவுதம்.
ஆவடி கழக மாவட்டம்: இரணியன் (தலைவர், திருமுல்லைவாயில்), மணிமாறன் (பூவை), சி. வஜ்ரவேல் (ஆவடி), வேல்முருகன் (பட்டாபிராம்), ஆ.வெ. நடராசன் (அம்பத்தூர்), சங்கர் (அம்பத்தூர்), சுந்தராசன் (ஆவடி) சென்னை கிருட்டிணன் (திருவேற்காடு), இரவிந்திரன் (ஆவடி), கோபால் (கொரட்டூர்), உடுமலை வடிவேல், ஆவடி நாகராஜ், சேத்துப்பட் நாகராஜ், சரவணன் (அம்பத்தூர்), சந்திரபாபு (பூவை), வெங்கடேசன் (பூவை).
திருவொற்றியூர் மாவட்டம்: இரா. சதீசுகுமார் (இளைஞரணி செயலாளர்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக