திங்கள், 19 ஜூன், 2023

சென்னையில் திராவிடர் கழக மகளிர் அணி மகளிர் பாசறை பயிற்சி பட்டறை தொடங்கியது

   32

 
31

சென்னை. மே 27- 
மாநில திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை  இணைந்து நடத்தும் மகளிருக்கான ஒருநாள் பயிற்சி பாசறையை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

மாநில திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு சென்னை பெரியார் திடலில் இன்று (27.05.2023) காலை தொடங்கியது.

பயிற்சி வகுப்புக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி  வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி வகுப்பிற்கு துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி   தலைமையேற்று உரை யாற்றினார்.  ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதிமுக்கிய தேவை மகளிர் முன்னேற்றமே என்பதை விளக்கி, பயிற்சி வகுப்பினை தொடக்கவுரை நிகழ்த்தி கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.  இன்றைய காலகட்டத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடப்பதன்  முக்கியத்துவம் குறித்து விளக்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் - பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

தாயுமான தந்தை பெரியார் - ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பினை துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  எடுத்தார்.

தொடர்ந்து கொடுக்கப்பட்ட தலைப்புகளில் வழக் குரைஞர். குமாரதேவன், கழக பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ. அருள்மொழி, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, மகளிர் பாசறை மாநிலத் தலைவர் வழக்குரைஞர் பா. மணியம்மை ஆகியோரின் வகுப்புகள் திட்டமிடப் பட்டுள்ளது. பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கி பொருளாளர் வீ.குமரேசன் நிறைவுரையாற்ற, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த. மரகதமணி   நன்றியுரை வழங்குவார்.

35

36


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக