சனி, 24 ஜூன், 2023

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் (தியாகராயர் நகர்) கண்ணம்மாபேட்டை மு.ஏழுமலை(வயது 91) அவர்கள் மறைவு!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் (தியாகராயர் நகர்) கண்ணம்மாபேட்டை மு.ஏழுமலை(வயது 91) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 15.06.23 பிற்பகல் 1.30 மணி அளவில் கண்ணம்மாபேட்டை, சித்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் 15.06.23 பி.ப.6.00மணி அளவில் மு.ஏழுமலை அவர்களின் உடலுக்கு  மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

16.06.23 காலை 8:30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட காப்பாளர் எம்.பி. பாலு அவர்கள் தலைமையில் பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழக கொடி போர்த்தி மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன்,
தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், தாம்பரம் இலட்சுமிபதி, வடசென்னை கோ. தங்கமணி, தஙக.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

11.00 மணி அளவில் கண்ணம்மா பேட்டை மின் சுடுகாட்டில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி தலைமையிலும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆ.டி. வீரபத்திரன் அவர்களின் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கு.அன்பு தனசேகரன் இரங்கல் உரை ஆற்றினார்.

தியாகராயர் நகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

நீலாங்கரை தோழர் ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம் சித்தார்த்தன்
க.லட்சுமணன் தபசு, வெங்கடேசன், க.கண்ணன், திமுக தோழர் சுந்தர்,
காங்கிரஸ் எம்.குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தியாகராயர் நகர் மு. ஏழுமலை அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக பேசிய தியாகராய நகரில் தந்தை பெரியாரின் சிலையை நிறுவிய குழுவில் பெரிதும் பங்காற்றியவர்.
தியாகராய நகரில் உள்ள தந்தை பெரியாரின் சிலை 1975 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பேசிய அதே நாளில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமையில் இன் நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் மூன்று தலைவர்களை கண்ட தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் மு. ஏழுமலை அவர்களின்   தொண்டிற்கு புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!
விடுதலை நாளேடு,16.06.23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக