திங்கள், 12 ஜூன், 2023

த.புகழேந்தி மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை


2

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு அவர்களின் மகன் த.புகழேந்தி (செய்தி மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குநர் - ஓய்வு) இன்று (11.6.2023) காலை மறைவுற்றார். அன்னாரின் உடல் சென்னை-28 ராஜா அண்ணாமலைபுரம், மூன்றாம் தெரு கதவு எண் 13/7இல் பொது மக்களின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

மறைவு தகவல் அறிந்ததும், பகல் 1 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத் திற்கு சென்று த.புகழேந்தியின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆசிரியருடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செயலாளர் மாரிமுத்து உடன் சென்று மரியாதை செலுத்தினர். 

- விடுதலை நாளேடு, 11.06.23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக