சென்னை, மே 28 வடசென்னை, தென் சென்னை மற்றும் ஆவடி, தாம்பரம், கும்மிடிப் பூண்டி, சோழிங்கநல்லூர் கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமாக வந்திருந்த கழகத் தோழர்கள் பங் கேற்ற எழுச்சிமயமான கூட்டமாக நடைபெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம் அனைவரையும் வரவேற்று - கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார்.
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா. மணியம்மை கடவுள் மறுப்புக் கூறினார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
மாநிலப் பொறுப்பாளர்கள்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர்கள் வீ. அன்பு ராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், பொரு ளாளர் வீ. குமரேசன், கழக ஒருங்கிணைப்பா ளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச் செய லாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர் தோழர்கள், கழக கொள்கைப் பிரச்சாரப் பணிகளில் எவ் வகையில் ஈடுபட வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக தமது உரையில் குறிப்பிட்டனர்.
மாவட்டக் கழகத் தலைவர்களின் கருத்துகள்
கலந்துரையாடலில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், வட சென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல். ப. ஆனந்தன், ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன் ஆகியோர் தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளின்படி, தமது பொறுப்பு மாவட்டங்களில் செய்து முடித்த கழகப் பணிகள் பற்றியும், இனி எதிர்வரும் காலத்தில் செய்திட திட்டமிடப்பட்டுள்ள கழகப் பணிகள் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினர்.
கழகத் தலைவரின் வழிகாட்டும் உரை
நிறைவாக தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில், ஈரோட்டில் 13.5.2023இல் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிற்குப் பிறகு - அதன் தீர்மானங்கள்படி நல்ல தொடக்கத்தோடு நடைபெறுகின்ற கலந்துரையாடல் கூட்டம் இது என்பதைக் குறிப்பிட்டார்.
கழகத்தின் இளைஞரணி, மகளிரணி, மாண வர் கழகம் உள்ளிட்ட மாவட்டங்களின் அனைத் துக் கழகத் தோழர்களுமே - கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தவறக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
"தந்தை பெரியார் தொடங்கி வைத்த அறப்போரில் நாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும். பிரச்சாரம் - போராட்டம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பணி செய்து, கண்ணுக்குத் தெரியாது இருக்கின்ற தந்தை பெரியாரின் பற்றாளர்களை, கழகக் கொள்கையா ளர்களை நம் கண்ணுக்குத் தெரிந்தவர்களாக ஆக்குவதில் சலிப்பின்றி பணியாற்றுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
நமது கொள்கைகளை நேரடியாக எதிர்ப்ப வர்கள் எவரும் கிடையாது. விஷமப் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமே நமக்கு எதிராக உள்ள னர். இதையெல்லாம் கடந்து, துணிச்சலுடன் பாடுபட்ட தந்தை பெரியார் வ.ரா. அவர்களால் "மண்ணை மணந்த மணாளர்" என்று குறிப்பிட்ட சிறப்புக்கொப்ப உலகத் தலைவராக இன்று உயர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
'கருத்தாடியவர்' என்ற அளவில் பெர்ட்டன்ரசல் போன்றவர்களுக்கு வரலாற்றில் தனி இடமுண்டு. ஆனால் தந்தை பெரியார் 'கருத்தாடியவர்' மட்டுமல்ல. அதற்கென்று 'களமாடியவர்' என்கின்ற சிறப்பும் பெற்றவர்.
அவர் விட்டுச் செல்லாதது எதுவுமே இல்லை. தனக்குப் பிறகும் தனது கொள்கைப் பிரச்சாரத்துக்கு அவர் ஏற்படுத்தித் தந்த வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி - பிரச்சாரப் பணிகளில் வேகமாக அனைத்துத் தோழர்களும் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டு, விரைவில் 'களப்பணிப் பயிற்சி' என கழகத் தோழர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமெனவும் கூறினார்.
கழகக் கிளைகள் சார்பில் கழகக் கொடிகள் பறக்காத கிளை அமைப்புகளே இல்லை என்கின்ற நிலையை ஏற்படுத்துவதோடு - கொடிகளோடு சுற்றுச்சூழல் மேம்பாட்டை மய்யப்படுத்தி செடிகளும் நட்டு இயற்கை வளத்தை மேம்பாடு அடையச் செய்வீர் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால் நன்றி கூறினார். அனைவருக்கும் சிற் றுண்டி ஏற்பாடுகளைச் செய்தார். இக்கலந்துரை யாடல் கூட்டத்தில் மண்டபம் நிரம்பி வழியும் அளவில் இருபால் தோழர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுகிறது திருவொற்றியூர்
புதிய மாவட்டம் உருவாக்கம் அதன் பகுதிகள் பின்வருமாறு:
1.வடசென்னை கழக மாவட்டம்
1. புதிய வண்ணை நகர்
2. பழைய வண்ணை நகர்
3.புளியந்தோப்பு
4.வியாசர்பாடி
5.பெரம்பூர்
6. மகாகவி பாரதியார் நகர்
7.கவிஞர் கண்ணதாசன் நகர்
8. கொடுங்கையூர்
9.பெரியார் நகர்
10. கொளத்தூர்
11.அண்ணா நகர்
12.அயனாவரம்
13.கீழ்ப்பாக்கம்
14.புரசைவாக்கம்
15.வேப்பேரி
16.பாரிமுனை
17.எருக்கமா நகர்
18.அரும்பாக்கம்
19.பட்டாளம்
2. திருவொற்றியூர் கழக மாவட்டம்
1. இராயபுரம்
2. திருவொற்றியூர்
3. காசிமேடு
4. மணலி
5. மாத்தூர்
6. எலந்தமா நகர்
7. மாதவரம்
8.எண்ணூர்
9.கத்திவாக்கம்
3.தென்சென்னை கழக மாவட்டம்
1. கோயம்பேடு
2.விருகம்பாக்கம்
3.வளசரவாக்கம்
4.கலைஞர் கருணாநிதி நகர்
5.அசோக் நகர்
6.கிண்டி
7.சைதாப்பேட்டை
8.அடையாறு
9.ஆலந்தூர்
10.தியாகராயர் நகர்
11.கோடம்பாக்கம்
12. நுங்கம்பாக்கம்
13. எழும்பூர்
14. சேப்பாக்கம்
15. திருவல்லிக்கேணி
16. மயிலாப்பூர்
17. பட்டினப்பாக்கம்
18. இராஜா அண்ணாமலைபுரம்
19. மந்தைவெளி
20. கோட்டூர்புரம்
21. அரும்பாக்கம்
வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்கள்
காப்பாளர்: கி.இராமலிங்கம்
தலைவர்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
செயலாளர்: புரசைவாக்கம் சு.அன்புச்செல்வன்
பொதுக் குழு உறுப்பினர்: தி.செ.கணேசன்
திருவொற்றியூர் மாவட்டம்
காப்பாளர்: பெரு. இளங்கோ
தலைவர் : எண்ணூர் வெ.மு.மோகன்
செயலாளர்: பொறியாளர் தே. ஒளிவண்ணன்
துணைத் தலைவர்: திருவொற்றியூர் ந.இராசேந்திரன்
வடசென்னை இளைஞரணி
தலைவர்: நா. பார்த்திபன்
செயலாளர்: சு. அரவிந்தகுமார்
திருவொற்றியூர் இளைஞரணி
தலைவர்: சதீஷ்குமார்
செயலாளர்: கவுதமன், காசிமேடு
திராவிடர் கழக மகளிரணி
வடசென்னை:
தலைவர் : க. சுமதி
செயலாளர்: ம. யுவராணி
மகளிர் பாசறை
வடசென்னை:
தலைவர் : த. மரகதமணி
செயலாளர்: பா. நதியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக