திங்கள், 19 ஜூன், 2023

தலைநகர் டில்லியில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

 

 4

சென்னை, ஜூன் 8 பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு எதிராக தலைநகர் டில்லியில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு ஆதரவாக இன்று (8.6.2023) திராவிடர் கழக மகளிர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினருமான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தி யாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ்பூஷன் மீது மோடி அரசு கரிசனம் காட்டி அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல் காத்து வருகிறது. 

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு பிரிஜ்பூஷனின் மகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அப்படி தற்கொலை செய்து கொள் வதற்கு முன்பு அவர் ஹிந்தியில் எழுதிய கடிதத்தை 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:

"எனது தந்தை மோசமானவர், அவரது நடவடிக்கை சரியில்லை, எனது சகோதர, சகோதரிகளிடம் அவர் நடக்கும் விதம் மோசமாக உள்ளது. அவர் எங்களுக்கு அப்பாவாக இருக்க தகுதியில்லாதவர்.

இப்படிப்பட்ட ஒரு நபருக்கு பிள்ளை யாக இருப்பதைவிட சாவதே மேல் என்று ஹிந்தியில் கடிதம் எழுதி வைத்து விட்டு அவரது மகன் தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை வழக்கு 2004ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதியே முடித்து வைக்கப்பட்டு விட்டது. 

இருப்பினும் தற்போது 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் சமூக வலைதளத்தில் ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தை வெளி யிட்டுள்ளது.

2004ஆம் ஆண்டே பாலியல் வன் கொடுமை குற்றவாளியான பிரிஜ்பூஷன் தனது குடும்பத்து உறுப்பினர்களிடையே நம்பிக்கைக்குத் தகுதியில்லாமல் நடந்து கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளது.

அப்போதே பிரிஜ்பூஷன்மீது 38 மோசமான கிரிமினல் குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்தன.

1974 முதல் 2007ஆம் ஆண்டு வரை இவர்மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் மோசமான நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு முறை சிறை சென்று வந்தவர் பிரிஜ்பூஷன் சிங். 

பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டு அமைப்புகள், இந்தியாவில் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள்மீது ஒன்றிய பாரதீய ஜனதா அரசின் தரம் தாழ்ந்த போக்கைக் கண்டித்துள்ளன.

இந்நிலையில் தலைநகரில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம் இன்று (8.6.2023) காலை சென்னையில் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இம்மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்ற, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், நூர் ஜஹான், வளர்மதி, அஜந்தா, மு.பவானி, இரா.சு. உத்ரா, அருணா   பொன்னேரி செல்வி, ராணி, இளையராணி, நதியா, த. சுமதி, யுவராணி, த.மரகதமணி,  பூவை செல்வி, அன்புச்செல்வி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, புதிய குரல் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.

திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர் இறைவி நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முனைவர் மஞ்சுளா, மணிமேகலை உடுமலை, தொண்டறம், பிருந்தா (தருமபுரி), தங்க. தன லட்சுமி, மணிமேகலை, நூர்ஜகான், மீனாம்பாள், கவிநிஷா, சொப்பனசுந்தரி, ஹேமமாலினி, கோட்டீஸ்வரி, சண்முக லட்சுமி, சமிக்ஷா, சுஜித்ரா, தமிழ்மாறன் (பிஞ்சு), நிர்மலா, பவதாரணி, லலிதா, குமாரி, கவிமலர், தமிழரசி, தென்னரசி, பெரியார் செல்வி, மங்கலம், அறிவுமதி, அன்புமணி, நிர்மலா, மெர்சி, அமலி, சுகந்தி, மகிழினி (பிஞ்சு), இனியன் (பிஞ்சு), நன்னன் (பிஞ்சு), செம்மொழி (பிஞ்சு) விஜயா, அபினா சுருதி.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வழிநடத்தினார். மற்றும் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வெங்க டேசன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் ஜெயராமன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் நாத்திகன், மோகன் ராஜ், வேலூர் பாண்டு, சி.காமராஜ், பெரியார் மாணாக்கன், கொடுங்கையூர் தங்கமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, அரும்பாக்கம் தாமோ தரன், கலையரசன், தி.செ.கணேசன், அருள், ஜி.தங்கமணி, செல்வம், உடுமலை வடிவேல், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ந.ரமேஷ், இ.தமிழ்மணி, அறிவுச்செல்வன், இரா.மாணிக்கம், தாம்பரம் குணசேகரன், க.கலைமணி, யுகேஷ், அண்ணா, மாதவன், கமலேஷ், திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தனசேகர், கணேசன், ஷாஜகான், திருவொற்றியூர் இராசேந்திரன், சதீஷ்குமார், பூவை தமிழ்ச்செல்வன், கொரட்டுர் முத்தழகு, ப.சேரலாதன் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக