சேப்பாக்கம், ஜூன் 29- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் கூட்டம் 23.6.2019 மாலை 6.00மணி அளவில் சேப்பாக் கம், எல்லீசு சாலையிலுள்ள மகேந்திரன் அலுவலகத்தில் நடைபெற்றது.
மண்டல செயலாளர் தே.சே.கோபால் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்த சாரதி, மற்றும் துணைத் தலைவர் டி.ஆர். சேது ராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறவுள்ள திராவிடர் கழக பவழ விழா மாநாடு சிறப்பாக அமைய ஒத்துழைப்பதெனவும், மாநாட்டிற்கு தென் சென்னை கழகம் சார்பில் தனி வாகனம் மூலம் செல்வ தெனவும், கிளைக் கழகங் களை புதுப்பித்தல் மற்றும் புதிய கிளைக் கழகங்களை உண்டாக்குதல் எனவும், தொடர் தெரு முனைக் கூட் டங்களை நடத்துவதெனவும், வாய்ப்புள்ள இடங்களில் கழக கொடி கம்பங்களை நிறுவுவதெனவும்,பெரியார் சமூக காப்பணிக்கு நென் சென்னை சார்பில் மேலும் கூடுதலாக தோழர்களை சேர்ப்பதெனவும் முடிவு செய் யப்பட்டது.
துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், மற்றும் சா. தாமோதரன், தரமணி பகுதி பொறுப்பாளர் கோ.மஞ்சநாதன், திருவல்லிக்கேணி பொறுப்பாளர் பெரியார் சேகர், மாணவர் கழக தலைவர் வி.விஸ்வாஸ், வி.விக்கி, செல் வராசு ஆகியோர் கருத்து களை கூறினர்.
இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் இறுதியில் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு,19.06.19
- விடுதலை நாளேடு,19.06.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக