கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட கண்டன உரை
சென்னை, ஜூன் 15, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (15.6.2019) காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கூறியதாவது:
இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுத் திணிப்புக்கு எதிராக, மாநில உரிமைகள் மீட்பதற்காக இன்றைய நாளில் திராவிடர் கழகம் ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தஞ்சாவூரில் நடைபெறுகின்ற ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
இந்த பிரச்சினையைப் பொருத்தவரையில் தமிழகத்திலே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள்தான் என்று 1968இலே அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொ ழுது தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, இங்கு இரு மொழிக் கொள்கைதான்.
ஆனால், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி 3 மொழி மட்டுமல்ல, சமஸ்கிருதத்தையும் சேர்த்து நான்கு மொழிகளைத் திணிக்கக்கூடிய ஒரு காரியத்திலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டினுடைய சட்டத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். தமிழ்நாட்டைப்பொருத்த வரையிலே இந்தி எதிர்ப்பு என்பது கிட்டதட்ட 1925ஆம் ஆண்டு முதலே தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக் கிறது. இந்தித் திணிப்பு என்பது ஓர் ஆட்சியையே தூக்கி எறியக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுடைய உதிரத்திலே கலாச்சாரத்திலே கலந்த ஒன்றாகும்.
இந்த நிலையிலே, இவர்கள் மீண்டும் இந்தியை அவ்வப்பொழுது கொண்டு வருவதும், அதைக் கடுமையாக தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்தவுடன் பின்வாங்குவது என்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையிலே இப்பொழுது மீண்டும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இதனைக் கடுமையாகத் திராவிடர் கழகம் எதிர்க் கும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அதேபோல நுழைவுத் தேர்வு என்பது எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலே கொண்டு வரப் பட்டது. தொடர்ந்து திராவிடர் கழகம் எதிர்த்து வந்தது. கலைஞர் ஆட்சிக்காலத்திலே நீக்கப்பட்டு விட்டது. அதற்குப்பின்னாலே இப்பொழுது 69 சதவிகித அடிப்படையிலே தமிழ்நாட்டில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிரா மப்புற ஏழை எளிய மக்கள் ஏராளமாக மருத்து வர்களாக, பொறியாளர்களாக வந்துகொண்டிருக் கிறார்கள்.
இது உயர்ஜாதி மக்களுக்கு குறிப்பாக பார்ப்பனர்களுக்கு அவர்களுடைய கண்களை உறுத்துகிறது. இதை மாற்ற வேண்டும் என்றால், கொல்லைப்புற வழியாக ஒரு சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
அதுதான் நீட் என்பது.
இந்த ஆண்டு வந்த அந்த முடிவுகள்கூட என்ன சொல்லுகிறது என்றால், தமிழ்நாட்டில் அரசு மேனிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேனிலைப்பள்ளிகள் நீட் தேர்வை எழுதியவர்களில் 400 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவர்கள் வெறும் 3 பேர்தான். 300 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவர்கள் வெறும் 29 பேர்தான். அப்படி என்றால், இந்த நீட் தேர்வு யாருக்கானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த நீட்தேர்வில்கூட தகுதி மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எப்படி என்று கேட்டால், ஒரு 60 சதவிகிதம் பேர் ஓராண்டு, ஈராண்டு காத்திருந்து அதற்கான பயிற்சிப்பள்ளிகளிலே சேர்ந்து பல லட்சம் செலவு செய்த பிறகுதான், இந்த 300, 400 மதிப்பெண்களைப் பெற்றவர்கள்தாம்.
அப்படி என்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, கிராமப்புற ஏழை எளிய மக்களால் காத்திருந்து பல லட்சம் செலவு செய்து நீட் தேர்வை எழுதி வெற்றி பெற முடியுமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் முகவுரையிலே ஜஸ்டிஸ், சோஷியல் என்று இருக்கிறது.
சமுக நீதி என்பது இந்திய அரசமைப்புச்சட்டத் தினுடைய முகவுரையிலே உத்தரவாதம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
ஆனால், அந்த சமுக நீதியை ஒழிக்கின்ற ஒரு காரியத்திலே, அரசமைப்புச்சட்டத்துக்கு எதிராக ஒரு காரியம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மூன்றாவது, மாநில உரிமை மீட்பது
இந்திய அளவிலே பல்வேறு மாநிலங்கள் இருக் கின்றன. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள் இருக்கின்றன. அந்தந்த மாநிலம் என்பது அந்தந்த மாநிலத்தினுடைய கல்வித்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். முதலாவதாக நம்முடைய கோரிக்கை கல்வி என்பது மத்திய பொதுப்பட்டியலிலிருந்து (Concurrent list) மாநிலப்பட்டியலில் கொண்டு வந்தால்தான் இதற்கு ஒரு முடிவு ஏற்பட முடியும்.
இல்லாவிட்டால், அடிக்கடி இந்தி கலாச் சாரத்தை, ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரத்தை, பார்ப்பன கலாச்சாரத்தை மற்ற மாநிலங்கள் மத்தியிலே அவர்கள் திணிக்கத்தான் செய்வார்கள்.
பிஜேபி ஆட்சி என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை செயல்படுத்தக்கூடிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. அதை நாம் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே நீண்ட காலமாக இருக்கக்கூடிய பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சியை இந்தியா முழுவ தும் கொண்டு வந்தால்தான் இதற்கானத் தீர்வு ஏற்படும் . அந்த வகையிலே திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.
இவ்வாறு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
பங்கேற்றோர்
வடசென்னை
பிரின்சு என்னாரெசு பெரியார், கொடுங்கையூர் தே.செ.கோபால், நா.பார்த்திபன், தி.செ.கணேசன், கோபாலகிருட்டினன், கோ.தங்கமணி, வெங்கடே சன் (பகுத்தறிவாளர் கழகம்), ஜீவானந்தம், வேல வன், பா.பார்த்திபன்.
திருவொற்றியூர் மாவட்டம்
புதுவண்னை செல்வம், வெ.மு.மோகன், கவிஅமுதன், வெங்கடேசன், கவுதம், முரளி, நதி ஆறுமுகம், சுதன், தாமோதரன், பன்னீர் செல்வம்
தென்சென்னை மாவட்டம்
இரா.வில்வராதன், சி.செங்குட்டுவன், டி.ஆர். சேதுராமன், மு.சேகர், கோ.வீ.ராகவன், மஞ்சநா தன், பி.டி.சி.ராஜேந்திரன், மு.ந.மதியழகன், ந.ராம சந்திரன், அரும்பாக்கம் தாமோதரன், மு.சண்முகப் பிரியன், வெற்றிவீரன்
மகளிரணி
ச.இன்பக்கனி, பா.மணியம்மை, சே.மெ.மதிவ தனி, வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, பசும் பொன், இறைவி, செல்வி (பூவை), பொன்னேரி செல்வி, மணிமேகலை, செல்வி, விஜயா, வளர்மதி, அஜந்தா, இளையராணி, த.நூர்ஜஹான், சீர்த்தி, தொண்டறம், அறிவுமதி, பவதாரணி, தங்கமணி, விஜித்ரா பிரியன், நதியா
தாம்பரம் மாவட்டம்
ப.முத்தையன், கோ.நாத்திகன், கோ.பாலசுப் பிரமணியன், கூடுவாஞ்சேரி இராசு, சிகாமணி, மா.குமார், குணசேகரன், சீனிவாசன், சு.சண்முகம், இ.தமிழினியன், சிவசாமி, கு.சோமசுந்தரம், இ.ப. இனநலம்.
சோழிங்க நல்லூர்
விடுதலைநகர் செயராமன், வேலூர் பாண்டு
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
வி.பன்னீர்செல்வம், புழல் த.ஆனந்தன், இரா. ரமேஷ், அருள், முருகன், கார்த்திகேயன், சுதாகர், பிரவீன்ராஜ், சோழவரம் சக்கரவர்த்தி, இரணியன்
ஆவடி
உடுமலை வடிவேல், இரணியன், பெரியார் மாணாக்கன், கலைமணி, சோபன்பாபு, வஜ்ரவேலு, ஸ்டான்லி, விஜய், முரளி, க.இளவரசன், வெங்க டேசன், மணிமாறன், ராமதுரை, கொரட்டூர் பன்னீர்செல்வம், தமிழ்மணி, வெ.கார்வேந்தன், ஏ.கண்ணன். இரா.கோபால் மற்றும் திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.கவுதமன், பஞ்சாட்சரம், சி.மூர்த்தி, கல்லக்குறிச்சி சுந்தர்ரா ஜன்.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்
போராட்டம் போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் மத்திய அரசே பிஜேபி அரசே
திணிக்காதே திணிக்காதே
இந்தியைத் திணிக்காதே
போராட்டம் போராட்டம்
சமஸ்கிருத எதிர்ப்புப் போராட்டம்
மத்திய அரசே, பிஜேபி அரசே
திணிக்காதே திணிக்காதே சமஸ்கிருதத்தைத் திணிக்காதே
போராட்டம், போராட்டம்
நீட்டை எதிர்த்துப் போராட்டம்
மத்திய அரசே, பிஜேபி அரசே
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு
நீட் தேர்வை வாபஸ் வாங்கு
வேண்டாம் வேண்டாம்
வேண்டவே வேண்டாம்!
புதிய கல்வியாம் பூர்ஷ்வா கல்வி
வேண்டாம், வேண்டாம், வேண்டவே வேண்டாம்!
புதிய கல்விஎன்னும் மும்மொழிக்கல்வி
வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்!
இருமொழிக் கல்வி தமிழ்நாட்டில்
இங்கு ஏதப்பா மும்மொழிக்கல்வி?
வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்!
குருகுலக்கல்வி என்று சொல்லி
வேதக் கல்வியைத் திணிக்காதே!
தேசியத் திட்டம் என்று சொல்லி
பார்ப்பனர் கலாச்சாரத்தைத் திணிக்காதே!
ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம்
என்று சொல்லி என்று சொல்லி
எங்கள் கலாச்சாரத்தை
அழிக்காதே - அழிக்காதே!
அனுமதியோம், அனுமதியோம்
ஆரியக் கலாச்சாரத்தை அனுமதியோம்!
போராட்டம் போராட்டம்
மாநில உரிமைப் போராட்டம்
தேசியம் என்ற போர்வையிலே
நசுக்காதே நசுக்காதே மாநில உணர்வை நசுக்காதே!
மாநில உரிமையை நசுக்காதே!
- விடுதலை நாளேடு, 15.6.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக