வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாளான இன்று (27.4.2019) சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கும் -& படத்திற்கும் கழகத் தோழர், தோழியர் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை, ஏப். 27 வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி.தியாகராயர் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.
நீதிக்கட்சியைத் தோற்றுவித்த மும் மணிகளுள் முக்கியமானவரான வெள் ளுடைவேந்தர் சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் 168ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2019) காலை 10 மணி யளவில் சென்னை மாநகராட்சி வளாகத் தில் (ரிப்பன் கட்டடம்) உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் கழகத்தோழர் - தோழியர்கள் புடைசூழ மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலா ளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணன், செல்லப்பன், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன், விருது நகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் கி.தளபதிராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, ஆயிரம் விளக்கு மு.சேகர், தரமணி மஞ்சுநாதன், திரு வொற்றியூர் பெ.செல்வராசு, வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராம லிங்கம், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, சோழிங்கநல்லூர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர் ஜெயராமன், பாண்டு, ஆனந் தன், கழக பேச்சாளர் மதிவதனி மற்றும் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெருந் திரளாக பங்கேற்றனர்.
சர்.பிட்டி. தியாகராயர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தை தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சர்.பிட்டி தியாகராயர் பேரவைத் தலைவர் மகாபாண்டியன், செயலாளர் நடராசன், சட்ட ஆலோசகர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
- விடுதலை நாளேடு, 27.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக