மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சைதைப் பகுதியில் 14.4.2019 அன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
சென்னை, ஏப்.15 மதச் சார்பற்ற தேசிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஆவடி மற்றும் சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்தார். விவரம் வருமாறு:
ஆவடி
திருவள்ளூர் மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் நேற்று (14.4.2019) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் பா.தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் க.இளவரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். கழக பொதுச் செய லாளர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், காங்கிரசு கட்சி முன்னணி நிர்வாகி உ.பலராமன், தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங் குட்டுவன், சி.பி.அய். மாவட்ட செயலாளர் மாரியப்பன், ம.தி.மு.க. தீர்மானக்குழு உறுப்பினர் அந்திரிதாஸ், சி.பி.எம். நகர செயலாளர் ராஜன், சி.பி.எம்.மாவட்டகுழு உறுப்பினர் பூபாலன், ம.ம.க. மாவட்ட செயலாளர் அஸ்காப், காங்கிரசு கட்சி நகர செயலாளர் ராஜசேகர், தி.க.அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல தலைவர் ரெத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட துணை தலைவர் ஏழுமலை, தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, பொதுக் குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில ப.க.பொதுச்செயலாளர் தமிழ்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலை வர் புழல் ஆனந்தன் உள்ளிட்ட தோழர்களும் கூட் டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆவடி நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
சைதை
மக்களவை தேர்தல் தென் சென்னை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க. வேட் பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து நேற்று (14.4.2019) நடைபெற்ற பரப்புரை கூட்டத்திற்கு சைதை பகுதி தி.மு.கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், கழக பொதுச் செய லாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திர சேகரன், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தி.மு.க.மாவட்ட செயலாளர் மேனாள் மேயர் மா.சுப்பிர மணியம், இ.கம்யூ.கட்சி பொறுப்பாளர் தோழர் ஆனி ராஜா, தி.மு.க பகுதி பொறுப்பாளர்கள் அன்பரசன், நாகா, சிறீதர், எஸ்.பி. கோதண்டம், எஸ்.பி. செல்வராஜ், மற்றும் கீழ்வேலூர் மாதவன், ம.தி.மு.க. நிர்வாகி ப.சுப்பிர மணியம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் பார்த்த சாரதி, பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், வழக் குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் மா.வீ. அருள்மொழி, சைதை தென்றல், சைதை எத்திராஜ் சகோதரர்கள், சைதை மதியழகன், தரமணி மஞ்சு நாதன், சோழிங்நல்லூர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், அரும்பாக்கம் தாமோதரன், ஆயிரம் விளக்கு சேகர், கோ.வீ. ராகவன் உள்ளிட்ட தோழர்களும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (14.4.2019)
சைதாப்பேட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு (14.4.2019)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஆனி ராசா அவர்கள் தமிழர் தலைவரை வரவேற்றார் (14.4.2019)
சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (14.4.2019)
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (சைதாப்பேட்டை, 14.4.2019)
- விடுதலை நாளேடு, 15.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக