வியாழன், 28 மார்ச், 2019

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து

திராவிடர் கழக மகளிரணி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




சென்னை, மார்ச் 17- பொள்ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை சார்பில் நேற்று (16.3.2019) மாலை 3 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், பணியாற் றும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டுள்ளனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வளர்ந்த ஒரு சமுதாயத்தில் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பி, வெட்க மடையவும் செய்கிறது.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார் கள் என்று எண்ணும்போது அதிகாரம் எந்த அளவுக்குக் கேவலத்தின் உச்சியையும் எட்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

இந்தக் கேவலமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைக்கு ஆளாக்கவில்லை என்றால், பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு என்பதே இல்லையோ என்ற பேரச்சத்தைத்தான் ஏற்படுத்தும். உலக நாடுகள் மத்தியில் நாம் தலைக் குனியும் அவலத்தை உண்டாக்கும். திராவிடர் கழக மகளி ரணி மகளிர் பாசறை சார்பில் சென்னையில் 16.3.2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 12.3.2019 அன்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

அதன்படி அன்னை மணியம்மையார் நூற்றாண்டு ஆண்டான இந்தாண்டில், பெண்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வுப் பணி வீறு கொண்டு எழும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழர் தலைவர் தெரிவித்திருந்தார்.

கழகத் தலைவரின் அறிவிப்பின்படி அன்னை மணியம்மையாரின் நினைவு நாளான நேற்று (16.3.2019) மாலை 3 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை யின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமை தாங்கி உரையாற்றினார்.

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, இறைவி, கு.தங்க மணி, சே.மெ.மதிவதனி, வி.வளர்மதி, நாகவள்ளி, பூவை.செல்வி, செ.கனகா, க.வனிதா, பொன்னேரி செல்வி, இராணிரகுபதி, பண்பொளிகண்ணப்பன், க.சுமதி, மரகதமணி, நதியா, பொன்னேரி இராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன உரை

திராவிட கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ம.தி.மு. க.வின் மாநில மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, "புதிய குரல்" எழுத்தாளர் ஓவியா ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.

திராவிடர் கழக மகளிர் பிரிவு இணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கி நன்றி கூறினார். ஆர்ப்பாட்ட முழக்கங்களை வழக்குரைஞர் வீரமர்த்தினி, இறைவி ஆகியோர் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் அ.கலைசெல்வி, வேலூர் மண்டலத் தலைவர் சட கோபன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், பெருங்கவிக்கோ, வா.மு.சேதுராமன், திண் டிவனம் சிறீராமுலு, கவிஞர் கண்மதியன், நெய்வேலி ஞானசேகரன், நிலவு முத்துகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

மகளிரணியினர்

துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி. பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, சி.வெற்றிச்செல்வி. க.பார்வதி, அ.கலைச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, மல்லிகா தயாளன் (மதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர்), தங்க.தனலட்சுமி, பெரியார் செல்வி, அ.வீரமர்த்தினி, செ.கனகா, க.பண்பொளி, பகுத்தறிவு, வளர்மதி, விஜயலட்சுமி, சே.தமிழரசி, கோட்டீஸ்வரி, நூர்ஜகான், நதியா சக்கரவர்த்தி, மணிமேகலை, பூவை. செல்வி, கனிமொழி, வனிதா, ராதிகா, மோகனப்பிரியா, ராணி ரகுபதி, நாகவள்ளி, நதியா, பொன்னேரி செல்வி, மடிப்பாக்கம் தேவி, வி.சாந்தி, இந்திராணி,  பொன்னேரி ராணி, அமல சுந்தரி, பூவிழி, சரோஜா, ஆற்றலரசி, பரிமளா ராமநாதன்,  இறைவி, சந்திரா, வாசுகி, கவின், கவிசிறீ, மேரி, காவியா, பா.மணியம்மை, சந்திரா, விஜயா மோகன், சீலா விக்ரம் சூர்யா, செம்மொழி, ராணி, கீதா, ஆவடி மெர்சி, கற்பகம், எழிலரசி, சரோஜா, தெய்வானை, வாசுகி, பவதாரணி

மறுமலர்ச்சி திமுக

கவுசல்யா ரவி, லட்சுமி ஜீவா, உஷா ஜெயச்சந்திரன், நாகம்மாள், மல்லிகா, சாந்தி, காந்திமதி, சுபாஷினி, மன்னி, மேரி, மகேஸ்வரி, மாரியம்மாள், கலைச் செல்வி, சாந்தி தியாகராஜன், புஷ்பா, மோகவள்ளி,

வடசென்னை

மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தி.செ. கணேசன், கி. இராமலிங்கம், கோ.தங்கமணி, பெரு.இளங்கோ, அ.செந்தமிழ்தாசன்,  ஆத்தூர் சேகர், புரசை சு.அன்புச்செல்வன், நா.பார்த்திபன், திலீபன், பா.கோபாலகிருட்டிணன்

தென்சென்னை

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், கோ.வி. ராகவன், சைதை தென்றல், ஆயிரம்விளக்கு சேகர், யாழ் பாண்டியன், சைதை செல்வம், தொழிலாளரணி பழனிபாலு.

தாம்பரம் மாவட்டம்

மாவட்ட தலைவர் ப.முத்தையன், கோ.நாத்திகன், வெ.ஞானசேகரன், விடுதலை நகர் செயராமன், கூடு வாஞ்சேரி இராசு, தாம்பரம் குணசேகரன், சோமசுந் தரம், சக்திவேல், தமிழினியன், பொற்செழியன், சீனிவாசன்,  மோகன்ராஜ், பொழிசை கண்ணன்

ஆவடி மாவட்டம்

மாவட்ட தலைவர் பா.தென்னரசு, க.இளவரசன், முத்துகிருஷ்ணன், சோபன்பாபு, கார்வேந்தன், கொரட்டூர் பன்னீர்செல்வம், ராமதுரை, கலைமணி, சுகுமாரன், பகுத்தறிவு, நடராசன், ஏழுமலை, அருள் தாஸ், மூர்த்தி, முரளி, தமிழ்மணி, ராமலிங்கம், பெரியார் மாணாக்கன், கொரட்டூர் கோபால், அமுதன், ரகுபதி, காரல் மார்க்ஸ், சந்திரபாபு, உடுமலை வடி வேல், பட்டாளம் பன்னீர், மூர்த்தி, டி.எஸ்.கவுதமன் (மேனாள் மாவட்டத் தலைவர், திருவண்ணாமலை)

கும்மிடிப்பூண்டி

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், இரா.ரமேஷ், உதயகுமார், அருள், முருகன், பாலாஜி, சோழவரம் சக்கரவர்த்தி, கஜேந்திரன், விஜயகுமார், பாலாஜி, தமிழ்ச்செல்வன்

எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!


போராட்டம் போராட்டம்

மகளிர் உரிமைப் போராட்டம்!

போராட்டம் போராட்டம்

பெண் சிங்கங்களின் போராட்டம்!

பெண் என்றால் பேதைகளா?

ஆண்களுக்கு அடிமைப் போதைகளா?

பெண் என்றால் போகப் பொருள்களா

ஆண்கள் என்றால் அராஜக சூரர்களா?

அனுமதியோம் அனுமதியோம்

ஆண்கள் ஆதிக்கத்தை - அக்கிரமத்தை

அனுமதியோம் - அனுமதியோம்!

முடிவு கட்டு முடிவு கட்டு

பொள்ளாச்சி கொடுமைகளுக்கு

முடிவு கட்டு முடிவு கட்டு!

ஓயமாட்டோம் ஓயமாட்டோம்!

முடிவு தெரியும்வரை ஓயமாட்டோம்!

வந்து விட்டோம் வந்து விட்டோம்

வீதிக்கே வந்து விட்டோம் - வந்துவிட்டோம்!

நிர்பயாவைத் தீண்டிய பாம்புகளை

தண்டித்தது போல பொள்ளாச்சி நாகப்பாம்புகளுக்கும்

தண்டனை கொடு - தண்டனை கொடு!

துடைப்பத்தை ஏந்திய கைகள்

துப்பாக்கியை ஏந்தும் துப்பாக்கியை ஏந்தும்!

மத்திய மாநில அரசுகளே

பயிற்சி கொடு - பயிற்சி கொடு

துப்பாக்கிப் பயிற்சி கொடு - உரிமம் கொடு!

கெஞ்ச மாட்டோம் கெஞ்ச மாட்டோம்

ஆண்கள் அராஜகத்தை ஒழித்திடாமல்

துஞ்ச மாட்டோம் - துஞ்ச மாட்டோம்!

வாழ்க வாழ்க வாழ்கவே!

தந்தை பெரியார் வாழ்கவே!

வெல்க வெல்க வெல்கவே!

பெண்கள் போராட்டம் வெல்கவே!

அன்னை மணியம்மையார் நினைவு நாளில்

சூளுரைப்போம் - சூளுரைப்போம்

பெண்களுக்கான சுயமரியாதையை காப்பாற்றிட காப்பாற்றிட

சூளுரைப்போம் - சூளுரைப்போம்!

சமையலறைப் பெண்களே

வாருங்கள், வாருங்கள் வீதிக்கு வாருங்கள்!

சுயமரியாதையை காப்பாற்றிட

சூளுரைக்க வாருங்கள்!

பெண்களே பெண்களே போராடு -

பெரியார் வழியில் நடைபோடு!

போராடுவோம் - வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

- விடுதலை நாளேடு, 17.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக